Posts

Showing posts from December, 2022

சிடுசிடுப்பான்ஸ்...!!

ஊர்,ஜில்லா,மாநிலம்,நாடு ன்னு எது மாறுனாலும் மாறாதது இந்த சிடுசிடுப்பான்ஸ் தரிசனம். இஞ்சித்திண்ண குரங்கைக்கண்டது இல்லைன்ற மனக்குமுறலைப் போக்கவே பிறவி எடுத்து வந்துருக்கானுங்க.  "உன் புன்னகை என்ன விலை? கோடி என்றாலும் வாங்குவேன்னு.." பேபிஸ்க்கிட்ட உருட்டுற மாதிரி இவனுங்கக்கிட்ட உருட்டவே முடியாது. ஏன்னா? அப்படி ஒரு வஸ்து இருக்கிறதே இவனுங்களுக்குத் தெரியாது. மிஸ்கின் பட ஹீரோ மாதிரி உர்ன்னு தான் இருப்பானுங்க.  "நீங்க அழகா இருக்கீங்க?"  உர்... "நீங்க ரொம்ப நல்லவர்.." உர்.. "நீங்க எந்த ஊர்.." உர்.. "நீங்க நிசமாவே மனுசன்தானா..." உர்.. "சிரிச்சி சிரிச்சு வந்தா..." பாட்டைக் கேட்கும் போதும் உர்... உர் என்று இருந்தால் ஊர் மெச்சும்ன்னு பிறக்கும் போதே எவனோ இவனுங்க காதுல ஓதிட்டுப்போயிட்டானுங்க போல. சிரிச்சா சில்லறை எதுவும் செலவாகாதுன்னு யாராச்சும் இவனுங்களுக்குச் சொல்லிக்கொடுங்கப்பா.  பணமென்றால் பிணமும் வாயைப் பிளக்கும்ன்னு எவனோ பழமொழியைத் தப்பா எழுதிட்டான் போல. கல்லாப்பொட்டி பக்கத்துல இருக்கவனுங்க தான் பெரும்பாலும் சிடுசிடுப்பான்ஸா ...