“ சின்ன சின்ன மழை துளிகள் சேர்த்து வைப்பேனோ மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து வைப்பேனோ …!?” என் சுவாசக்காற்றில் வரும் இந்தப் பாடலைப் பல முறைக் கேட்டிருக்கிறேன். ஆனால் இதுவரை இந்த சந்தேகம் வந்ததில்லை , இந்த வார்த்தையையும் சரிவர கவனிக்கவில்லை.அந்த வார்த்தை வரும் வரி இது தான்.... “ சக்கரவாகமோ மழையை அருந்துமாம் நான் சக்கரவாக பறவை ஆவேனோ... ?” ` சக்கரவாகம் ` .இது தான் , இந்த வார்த்தை தான். ` சக்கரவாகம் ` . சக்கரவாகனம் கேள்விப்பட்டிருக்கிறேன். இது என்னய்யா புது வார்த்தையா இருக்கு.வழக்கம் போல “ஜெய் கூகுளாண்டவா” என வணங்கி தேடலைத் தொடங்கினேன்.வழக்கம் போல நமது கற்பனைக் கவிஞர்கள் சுட்ட வடை தான் அது. சக்கரவாகப்பறவை அல்லது சாதகப்பறவை என்றொருப் பறவையை கற்பனையாய்ப் படைத்துள்ளார்கள். அதாவது மண்ணில் விழுந்துவிட்ட ஒரு சொட்டு தண்ணீரைக்கூட சக்கரவாகம் அருந்தாதாம். பூமி தொடாத பரிசுத்த பானி(நீர்)யைத்தான் பறவைவாள் அருந்துவாராம். அப்படி ஒரு பறவை நிஜத்தில் இல்லை. எல்லாம் நம் கற்பனைக்கவிஞர்கள் எழுதி வைத்த உடான்ஸ் தான். ஆனால் , அதில் ஓர் ஆன்மிக உள்ளர்த்தமும் கற்பிக்க முடிகிறது. அதாவது இறைவனை...