ரெய்டு..!
ஹேய் ஹூய் என ஆர்ப்பரிக்கும் ஆக்சன் பட விரும்பியா நீங்கள்..! ஒரு நிமிடம் கூட விடாமல் மிரட்டலான சண்டை காட்சிகள் வேண்டுமா ? ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு அதிரடி ஆக்சன் சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் பார்க்க வேண்டுமா ? மயிர் கூச்செரியும் சண்டைக்காட்சிகள் வேண்டுமா ? .இன்னும் பல ஆக்சன் பட இத்யாதி இத்யாதிகள் வேண்டுமா ? கட்டாயம் ரெய்டு இந்தோனேஷிய படம் பாருங்கள். முற்றிலும் நம்பகத்தன்மை வாய்ந்த சண்டைக்காட்சிகள்.நம்ம கோலிவுட் அதிரடி வியாழன் போல் குரளி வித்தைகள் அல்லாது. படம் தொடங்கிய ஐந்தவாது நிமிடம் தொடங்கி படம் முடியும் வரை ஆக்சன் , ஆக்சன் , ஆக்சன் மட்டுமே..! ஒரு பெரிய அடுக்கு மாடி குடியிருப்பிலிருந்து கொண்டு தவறான , பலான , பலான கஜ கஜா தொழில் செய்யும் வில்லனை ஹீரோஅண்ட் கோ , எப்படி நம்ம கேப்டன் பாகிஸ்தான் தீவிரவாதிகளை பந்தாடுவாரோ அது போல பந்தாடுகிறார்கள்.ஒரு நிமிடம் கூட கண் சிமிட்ட விடவில்லை. உச்சா பிரேக் கூட எடுக்கவிடாமல் ஒரே கல்ப்பில் பார்த்து முடித்திருக்கிறேன். நீங்களும் பார்த்து உய்யுங்கள். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! ஓம் அக்சன் கிங் அர்ஜ...