Posts

Showing posts from November, 2018

ரெய்டு..!

Image
ஹேய் ஹூய் என ஆர்ப்பரிக்கும் ஆக்சன் பட விரும்பியா நீங்கள்..! ஒரு நிமிடம் கூட விடாமல் மிரட்டலான சண்டை காட்சிகள் வேண்டுமா ? ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு அதிரடி ஆக்சன் சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் பார்க்க வேண்டுமா ? மயிர் கூச்செரியும் சண்டைக்காட்சிகள் வேண்டுமா ? .இன்னும் பல ஆக்சன் பட இத்யாதி இத்யாதிகள் வேண்டுமா ? கட்டாயம் ரெய்டு இந்தோனேஷிய படம் பாருங்கள். முற்றிலும் நம்பகத்தன்மை வாய்ந்த சண்டைக்காட்சிகள்.நம்ம கோலிவுட் அதிரடி  வியாழன் போல் குரளி வித்தைகள் அல்லாது. படம் தொடங்கிய ஐந்தவாது நிமிடம் தொடங்கி படம் முடியும் வரை ஆக்சன் , ஆக்சன் , ஆக்சன் மட்டுமே..!      ஒரு பெரிய அடுக்கு மாடி குடியிருப்பிலிருந்து கொண்டு தவறான , பலான , பலான கஜ கஜா தொழில் செய்யும்   வில்லனை ஹீரோஅண்ட் கோ , எப்படி நம்ம கேப்டன் பாகிஸ்தான் தீவிரவாதிகளை பந்தாடுவாரோ அது போல பந்தாடுகிறார்கள்.ஒரு நிமிடம் கூட கண் சிமிட்ட விடவில்லை. உச்சா பிரேக் கூட எடுக்கவிடாமல் ஒரே கல்ப்பில் பார்த்து முடித்திருக்கிறேன். நீங்களும் பார்த்து உய்யுங்கள். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! ஓம் அக்சன் கிங் அர்ஜ...

காயிலான் கடை..!!

Image
இந்த வார்த்தை தான் நம் வாழ்க்கையில் எத்துணை அழகாக பின்னி பிணைந்து விட்டது.ஏனோ தெரியவில்லை அது குறித்த நினைப்பு வந்து தொலைத்துவிட்டது. வருடா வருடம் பழைய புத்தகங்களை எடைக்கு போட்டுவிட்டு கிடைத்த பணத்தை , அடுத்தவருட நோட்சுகளை வாங்க உண்டியலில் சேர்த்து வைத்தது , வீட்டின் மூலையில் அவ்வப்போது   கிடக்கும் மது பாட்டில்களை எடைக்கு போட்டுவிட்டு சோன்பப்டி வாங்கித் திண்பது என அந்த பழைய , பசுமையான நினைவுகள் கண் முன் நிழலாடியது.   பழைய பொருட்களை விற்கும் கடைக்கு எப்படி இந்த வார்த்தை வந்தது என்று ஒரு போதும் யோசித்ததே கிடையாது. ஏனோ இன்று சிறு மூளையில் ஒரு சிறு பொறி வெட்ட அது குறித்த தேடலைத்துவங்கினேன்.   காயிலான் கடை என்ற வார்த்தைக்கு பின்னான வரலாறு மிக சுவாரசியமாய் இருக்கிறது.உண்மையும் கூட.   இதற்கு நாம் முதல் உ லகப்போர் நிகழ்ந்த காலத்துக்கு தான் பயணிக்க வேண்டும்.   நம்மவர்களிடம் ஒரு கெட்டப் பழக்கம் விடாப்படியாக காலங்காலமாக   கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அது யாதெனில் எப்பொருள் எக்கேடு கெட்டு போனாலும் , பயன்படாமலே போனாலும்   அதை தூக்கி எறியவும் மனமில...

“கள்” துறப்போம்..!

Image
தமிழகத்தின் ஆகப்பெறும் சாபங்களில் ஒன்று “மது”. நாளுக்கு நாள் மது அருந்துபவர்களின் எண்ணிக்கையும் , மதுக்கடைகளின் எண்ணிக்கையும் உயர்ந்தபடியே தான் இருக்கிறது. தமிழகமே மதுக்கடலில் கரை சேர வழி அகப்படாமல் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. மதுவும்,அதனால் விளையும் ஆபத்துகளைப்பற்றியும் மணற்துகளளவு கூட  அரசுக்கும், மதுப்பிரியர்களுக்கும் அக்கறையில்லை. தேன் உண்ணச் செல்லும் ஈ யானது தேனில் சிக்குண்டு  உயிரோடு திரும்புவதில்லை, அதுபோலவே மது அருந்தும் மாக்கள் வாழ்வும். ‘ஈ’ க் கூட தேனின் சுவைக்குத்தான் உயிரை விடுகிறது, இந்த மதி கெட்ட மானுடன் எதற்க்காக இப்படி அழிகிறான் என்பது வியப்பே! நிகழ்காலத்தில் மது அருந்துவதை பெருமையாகக் கருதும்  மூட இளைஞர் பட்டாளம் பெருந்திரளாக உருவாகி வருவது பெருஞ்சோகம். எதைப் பற்றியும் அக்கறையில்லாத இவர்கள் தாம் தமிழகத்தின் எதிர்காலம் எனும் போது சற்று இதயத்துடிப்பு எகிரத்தான் செய்கிறது. தமிழ் கூரும் நல்லுலகம் தீயவை என்றும், ஐம்பெரும் பாவங்கள் என்றும்   “பொய்,கொலை,கள்,களவு,காமம்” அகியவற்றை எடுத்துரைக்கிறது. அவற்றுள் மத்திமமாய் அமர்ந்து மற்ற நான்குக...