Posts

Showing posts from February, 2019

பலகீனங்களால் ஆன ஒரு உயிரினம்..!

Image
இந்த பாரிலே பிறந்ததும் எழுந்து நடக்கத் தெரியாத ஒரே விலங்கினம் “ மனுசன்” தான். பிறந்தது முதல் இறப்பது வரை யாருடைய தோளிலாவது சவாரி செய்தே வாழப் பணிக்கப்பட்டவன்.  விலங்கினங்கலிலிருந்து சிந்திப்பது ஒன்றைத் தவிர மற்ற எந்த வலிமையையும்ப் பெறாதவன். பலகீனங்களின் ஒட்டு மொத்த வடிவமாய் நடமாடிக்கொண்டிருக்கிறான். அவனுக்கு, தனியே நடப்பது பயம், தனியே வசிப்பது பயம், பிடித்ததைப் பேச பயம், பிடித்தன செய்ய பயம், சுற்றத்தைக் கண்டு பயம், சூழ்நிலை கண்டு பயம், அரசைக் கண்டு பயம், அன்பைக் கண்டு பயம், தோழமை கொள்ள பயம், தோல்வி கண்டு பயம், கரம் பற்ற பயம், கல்வி கற்க பயம், ஆசைகள் கொள்ள பயம், அடைவன நினைத்து பயம், சொற்கள் பயம், கேட்டல் பயம், உறவுகள் பயம், உண்பதில் பயம், கண் பார்த்தல் பயம், கட்டியணைத்தல் பயம், காதலும் பயம், முத்தமும் பயம் என மொத்தமும் பயமாய் சூழ்ந்திருக்க வாழ்கிறான் மகிழ்ச்சியாய், எப்படி?.மறைத்தல் மனுசனுக்கு பிறவி வரமாம். யாரும் அறியா வண்ணம், பயம் எனும் அவ்வேதாளத்தைத் தோளில் சுமந்தவாரே சக உயிரின் ஏதோ ஒரு சொல்லில், செயலில், அன்பில் தன் பயம் தனைப் புதைத்து வீராதி வீரனாய் ராஜ நடைப் போட்டுக்கொண்டிருக்க...

பட்டத்து யானை..!

Image
புத்தகம் குறித்தெல்லாம் எழுதி நீண்ட நாட்களாகிவிட்டது.காரணம் சோம்பேறித்தனம்.மட்டுமல்லாது , எந்த ஒரு புத்தகமும் எழுதும் அளவு உற்சாகமூட்டவில்லை. தேமே என எழுதி வைத்திருக்கிறார்கள். நாலு பக்கம் புரட்டுவதற்குள் நாற்பது முறை கொட்டாவி வந்து தொலைக்கிறது. ஆனால் பட்டத்து யானை அப்படியல்ல. 410 பக்கம் , ஆரம்பித்ததும் தெரியவில்லை , முடித்ததும் தெரியவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல நாவல் படித்த மகிழ்ச்சி.அதுவும் ஒரே கல்பில். பிடிக்காத போதும் மகிழ்ச்சியில் கூடுதலாக இரண்டு இட்லி சேர்த்து முழுங்கினேன். எல்லாம் கிடக்கட்டும் புத்தகத்துக்கு வருவோம். ஆப்ப நாடு என்ற ராமநாதபுரம் சுற்று வட்டார மக்களின் வாழ்க்கையை புத்தகம் முழுமையாக பதிவு செய்திருக்கிறது. வீரத்திலும் , தீரத்திலும் ஆப்பநாடு மக்கள் எப்படி சிறந்து விளங்கினார்கள் , ஒற்றுமையாய் எப்படி வெள்ளைக்கார ஆதிக்கத்தை எதிர்த்தார்கள் , அவர்களின் சூழ்ச்சியால் எப்படி வீழ்ந்தும் போனார்கள் என்பதை சிறிதும் கலப்பில்லாமல் நாவலாய் வடித்திருக்கிறார். ரணசிங்கம் என்ற பெயரை இனி வாழ்நாளில் மறக்க இயலாது.கதை நாயகனான , “ரணசிங்கம்” , அவன் தம்பி தங்கசாமி ...