கட்டைவிரல் காயமும், முக்கால் மண்டலமும்...!!
என்ன கடுப்புல வேலை செஞ்சேன்னு தெரியல, கேபிள் டை நறுக்கும் போது வலது கை கட்டைவிரல்ல 1.5 செமீ அளவுக்கு 90 டிகிரில நேரா பொளந்துடுச்சு கடந்து போன பிப்ரவரி 27 ந் தேதி. கூட வேலை பார்க்குறவனுங்க முதலுலதவின்ற பேர்ல மூணு நாளு பேண்ட்டேஜ கண்டமேனிக்கு ஒட்டி விட்டானுங்க. அடிபட்டப்ப கூட வலி தெரியலை.நேரம் ஆக ஆக சுருக் சுருக் னு வலி ஏற ஆரம்பிச்சுச்சு. சின்ன காயம் தானா அப்படின்னு நினைச்சேன்.ஆனா இவனுங்க ஒட்டுன பேண்டேஜ தாண்டி ரத்தம் பொளந்த இடத்துல இருந்து பீறிக்கிட்டு வந்துச்சு. ஒரு முழு பனியன சுத்தி கைய புடிச்சிக்கிட்டு சைட்ல இருந்து வந்து , கேம்ப் ஹாஸ்பிட்டல்ல ஆப்பிள் நறுக்கும் போது கை பொளந்துடுச்சுனு ஒரு புரூடா விட்டு (உண்மை தெரிஞ்சா சேப்டி வைலேசன்னு ஒரு என்குயரி நடக்கும்) டாக்டர பாக்கப்போனா, கம்பவுண்டர் வந்து ஹைட்ரஜன் பெராக்சைட ஊத்தி கிளீன் செஞ்சு, ஒரு ஆயில் மெண்ட அவன் கைல படாம எண்ணெய்க்கு மேல முறுக்கு புழியற மாதிரி என் கட்டைவிரல் மேல புழிஞ்சு கட்டுனான் பாருங்க ஒரு கட்டு, கட்டைவிரல் கல்தூண் மாதிரி ஆகிடுச்சு. மிச்சமீதி ஆயில்மண்ட் கையில குடுத்து, வலி தெரியாம தூங்க மாத்திரை ஒரு நாலு கொடுத்தா...