தனி ஒருவன்
கூட்டத்துலயே வாழ்ந்து, கூட்டத்துலயே தவழ்ந்து, கூட்டத்துலயே மிதந்த ஒருத்தன் தனி ஒருத்தனா ஃபீல் பண்றதெல்லாம் கடல் வற்றினால் நடக்குற மாதிரி அதிசயம் தான். ஆனால், வாழ்க்கை இன்ட்ரோவெர்ட்ட எக்ஸ்ட்ரோவெர்ட்டாவும், எக்ஸ்ட்ரோவெர்ட்ட இன்ட்ரோவெர்ட்டாவும் மாத்துறதுக்கு லிட்டில் பிரின்சஸ் சமைக்குறதுக்கு மெனக்கெடுற மாதிரி கூட மெனக்கெட தேவையில்லை. இயல்பா அது பாட்டுக்கு சம்பவம் செஞ்சிட்டு வாழ்க்கை ஒரு வட்டம்ன்னு விசய்ண்ணா வசனத்தை பேசாமப்பேசிட்டு போய்ட்டே இருக்கும். நானும் மதுரைக்காரன் தான்டா மாதிரி, நானும் பெரிய சம்பவக்காரன் தான்டான்னு காலம் மட்டும் தான் சட்டை காலரை தூக்கிவிட்டுக்க முடியும். காலேஜ் வரைக்கும் வாயைத்தொறந்தாலே கவுண்ட்டர் அடிச்சு அழிச்சாட்டியம் பண்ண என்னையைப்போய் அண்ணே, சாம்பார் இன்னும் கொஞ்சம் வேணும்ன்னு கேட்கக்கூட கூச்சப்பட வச்சிடுச்சு. மாசம் ஒரு புது இடம்ன்னு டைம்டேபிள் போட்டு காசே இல்லாத காலத்துலயும் முருக பெருமான் மயிலேறி உலகத்தைச் சுற்றி வந்த மாதிரி சுற்றிக்கிட்டு இருந்த என்னை, இப்ப என்னடான்னா? லீவ்னா கூட வீட்டை விட்டு போகவேண்டாம்ன்னு இழுத்து போர்த்திக்கிட்டு தூங்க வச்ச மேஜிக் எ...