தனி ஒருவன்
கூட்டத்துலயே வாழ்ந்து, கூட்டத்துலயே தவழ்ந்து, கூட்டத்துலயே மிதந்த ஒருத்தன் தனி ஒருத்தனா ஃபீல் பண்றதெல்லாம் கடல் வற்றினால் நடக்குற மாதிரி அதிசயம் தான். ஆனால், வாழ்க்கை இன்ட்ரோவெர்ட்ட எக்ஸ்ட்ரோவெர்ட்டாவும், எக்ஸ்ட்ரோவெர்ட்ட இன்ட்ரோவெர்ட்டாவும் மாத்துறதுக்கு லிட்டில் பிரின்சஸ் சமைக்குறதுக்கு மெனக்கெடுற மாதிரி கூட மெனக்கெட தேவையில்லை. இயல்பா அது பாட்டுக்கு சம்பவம் செஞ்சிட்டு வாழ்க்கை ஒரு வட்டம்ன்னு விசய்ண்ணா வசனத்தை பேசாமப்பேசிட்டு போய்ட்டே இருக்கும். நானும் மதுரைக்காரன் தான்டா மாதிரி, நானும் பெரிய சம்பவக்காரன் தான்டான்னு காலம் மட்டும் தான் சட்டை காலரை தூக்கிவிட்டுக்க முடியும்.
காலேஜ் வரைக்கும் வாயைத்தொறந்தாலே கவுண்ட்டர் அடிச்சு அழிச்சாட்டியம் பண்ண என்னையைப்போய் அண்ணே, சாம்பார் இன்னும் கொஞ்சம் வேணும்ன்னு கேட்கக்கூட கூச்சப்பட வச்சிடுச்சு. மாசம் ஒரு புது இடம்ன்னு டைம்டேபிள் போட்டு காசே இல்லாத காலத்துலயும் முருக பெருமான் மயிலேறி உலகத்தைச் சுற்றி வந்த மாதிரி சுற்றிக்கிட்டு இருந்த என்னை, இப்ப என்னடான்னா? லீவ்னா கூட வீட்டை விட்டு போகவேண்டாம்ன்னு இழுத்து போர்த்திக்கிட்டு தூங்க வச்ச மேஜிக் எப்படி நடந்துச்சுன்னு தெரியலை.
சொந்தக்காரங்களுக்கு ஃபோன் பண்ண தயக்கம், புதுசா ஒரு ஹோட்டலுக்குப் போய் சாப்பிட தயக்கம், அதிலும் ரொம்ப சுத்தபத்தமா ஹைஃபையா காமிச்சுக்குற ஹோட்டல பார்த்தாலே வெற்றிக்கொடி கட்டு படத்துல வடிவேலு பார்த்திபனைப் பார்த்துட்டு கண்டும் காணாம போகிற மாதிரி போக சொல்லுது, ஃப்ரி டைம் இருக்கு எங்கேயாவது போலாம்ன்னா ஆணியேப் புடுங்க வேணாம், கதவை சாத்திட்டு, ஏசியை மைனஸ் ஐம்பதுல வச்சிட்டு இழுத்துப்போர்த்திட்டு தூங்குடா கண்ணான்னு எனக்கு நானே சொல்லிட்டு தூங்கிடுறேன். எல்லாத்துக்கிட்டயும் கூச்சப்படாம பேசுனது போய், இவன்கிட்ட பேசுனா என்ன பிரச்சனை வருமோன்னு பீதியா இருக்கு இப்பலாம்.
எப்படி இப்படி ஆனேன்னு பார்த்தா, எல்லாம் வேலைக்குப்போக ஆரம்பிச்சதுக்கு அப்புறம் தான். காலேஜ் வரை சுற்றி இருந்த ஒருத்தனும் எனக்கு சுயநலவாதியாத் தெரியலை, சொந்தக்காரங்க கூட பெரிய தொந்தரவா இருந்ததில்லை. ஆனால், வேலைக்கு சேர்ந்தப்பிறகு தான் இப்படியெல்லாம் மனுசங்க இருப்பாங்கலான்னு கதறக்கதற கற்பழிச்சுது எதார்த்தம். இந்தியாவுல வேலைப் பார்த்த வரைக்கும் கூட கூட்டமா தான் வேலைக்குப்போனோம், எல்லாம் என் வயசுக்கு கொஞ்சம் முன்ன பின்ன இருந்த பசங்க, சாயங்காலம் ஆனால் எல்லாப்பிரச்சனையையும் பேசி புலம்பி எவனையாவதுத்திட்டி மனசை வாடாமப் பார்த்துக்கிட்ட மாதிரி இருந்துச்சு. தனிமையா அது கிலோ என்ன விலை? ன்னு தான் இந்தியாவுல வேலைப் பார்த்த வரைக்கும் கேட்டுக்கிட்டே இருந்தேன். ஆனால், வெளிநாட்டுக்கு வேலைக்கு வந்த பிறகு தனிமையோ தனிமைன்னு ஷின்சான் கணக்கா புலம்ப வச்சிடுச்சு. எவனும் எவன் கிட்டேயும் முகம் கொடுத்து மனசு விட்டு பேசுறதே இல்லை. ஸ்கோப் மேட்ரிக்ஸ் கையிலயே பிடிச்சிக்கிட்டுத் தான் திரிவானுங்க. எல்லாத்துக்கும் பயம். அதுலயும் ரெஸ்பான்சிபிலிட்டி எடுக்குறதுக்கு ரொம்ப பயப்படுவானுங்க. சாப்பிட்டாச்சான்னு? கேட்டா கூட,அதுக்கு பதில் சொல்றது எங்க ஸ்கோப்ல இல்லைன்னு தெறிச்சு ஓடிடுவானுங்க. முன்னோரும் மூத்தோரும் வழிகாட்டி மாதிரி இங்க நடந்துகிட்டதே இல்லை. இவனுங்கக்கிட்ட மாட்டி படாத பாடுபட்டு இப்ப தான் தனியா வேலைப் பார்க்கவும், தனிமையை ரசிக்கவும் பழகியிருக்கேன். தனி ஒருவனா இருக்கிறதும் சுகமாத்தான் இருக்கு..!! சகத் தனி ஒருவன்களுக்கு அன்பும் வாழ்த்தும்..!!
Comments
Post a Comment