திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......



   பெரியப்பா குடும்பத்தோடு  மாதம் தோரும் கடைசி ஞாயிறு அன்று சிவத் தலங்களுக்கு சென்று வழி படுவது வழக்கம் .அடியேன் ப்ரீயாக இருப்பின் அவர்களோடு பங்கேற்ப்பது வழக்கம் .இந்த முறை அடியேன் மிகவும் வெட்டியாக இருந்தமையால் அனைவரோடும் கோவிலுக்கு செல்வதென்று முடிவு செய்தேன். இந்த முறை திருநல்லூர் ஸ்ரீ் கல்யாணசுந்தரேஸ்வரர் கோவிலுக்கு செல்வதென்று முடிவாகியது. பொதுவாக பெரியப்பா அழைத்துச்செல்லும் கோவில்கள் அனைத்தும் அடியேன் அறியாததாகவும் பழம் பெருமை வாய்ந்ததாகவும் , சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகவும் இருக்கும்.அடியேன் ஒவ்வொருமுறையும்  ஏதாவது ஒரு வரலாற்றை அறிந்து வியந்து தான் வந்திருக்கிறேன்.கும்பகோணம் தாண்டி பாபநாசம் முன்னால் வழைப்பழக்கடை ஸ்டாப்பிங் ல் ( அங்கு வழைபழக்கடைகளே இல்லை- என்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது) இறங்கி நடந்தால் சுமார் 1.5 கி. மீ தொலைவில் கோவில் அமைந்திருந்தது . உள்ளே சென்றதும் லிங்கமானது நாள் தோறும் பல்வேறு வண்ணங்களில் மாறி மாறி காட்சியளிப்பதை எண்ணி வியந்தேன்.
1.    6.00-815( தாமிர நிறம்)
2.   8.16-11.30 ((இளஞ்சிவப்பு)
3.   11.30-1.15 ( தங்க நிறம் )
4.   1.15- 3.30( பச்சை நிறம்)
5.   3.30 -6.00( என்ன நிறம் என்றே யூகிக்க முடியா வண்ணம்)
இவ்வாறாக நிறம் மாறி மாறி காட்சியளிக்கிறார். லிங்கமானது கல்லாலும் செய்யப்படவில்லை ,மரத்தாலும் செய்யப்படவில்லை , இரும்பாலும் செய்யப்படவில்லை என்பதை விட எதானால் செய்திருக்கிறார்கள் என்று யாராலும் அறிய முடியவில்லை .இந்த தொழில் நுட்ப யுகத்தில் இது எனக்கு மிகப் பெரிய அதிசயமாகத்தான் தோன்றியது. அனைவரும் சென்று பார்க்க வேண்டிய முக்கியமான சிவத்தலங்களுள் ஒன்று .இன்னும் சொல்வதற்கு நிறைய இருக்கிறது இருப்பினும் நேரில் சென்று பார்ப்பதே சாலச்சிறந்தது. நிறைய தெரிந்து கொள்ளலாம் . ........  ஓம் நமச்சிவாய...

Comments

Popular posts from this blog

உல்பா..!!!

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!