கங்கை கொண்ட சோழன்.... சோழர்களின் வீர வரலாறு...
பன்னிரண்டாம்
வகுப்பு படிக்கும் போது பாலக்குமாரனின் ஒரு ஆன்மீக நாவலை படிக்கும் சந்தர்ப்பம்
ஏற்பட்டது.அடியேனுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் இருப்பினும் , தலங்களுக்கு செல்லும் விருப்பம் அதிகம்
உடையவனாக இருப்பினும், ஆன்மீகத்தை எழுத்தின் மூலம் படிக்கும் அளவுக்கு பொறுமை துளி கூட கிடையாது. அந்த நாவலை பத்து
பக்கம் படிப்பதற்க்குள் நூறு முறை கண்கள் சொக்கியது. அன்று முதல் பால குமாரன்
அவர்கள் ஆன்மீகம் பற்றி மட்டுமே எழுதும் பெரியவர் என அவரையும் அவர்
புத்தகங்களையும் அரவே ஒதுக்கிவிட்டேன்.
****************************
உதயா மாமா 40 வயதைக் நெருங்கிய சீனியராக
இருப்பினும் டிரண்டில் இருப்பவர். ஜாலியாக பழகும் மனிதர். அவர் வரலாற்றின் மீது
அவ்வளவு பிரியம் வைத்திருக்கிறார் என்பதை அவர் கங்கை கொண்ட சோழன் புத்தகத்தை
ஆன்லைனில் ஆர்டர் போடு என்று கூறும் வரை அடியேன்
அறியவில்லை.....மாமா அவர் புக்ஸ்லாம் போர் ,படிச்சா தூக்கம் தான் வரும் ,அதைப்போய் ஏன் வாங்குறீங்க? என கேட்டது தான் தாமதம்.” சரவணா உனக்கு சிம்பிளா ஒன்னு சொல்றேன், ஜென்டில் மேன் படத்துக்கு டயலாக்
எழுதுனது அவர் தான். புக்க ஆர்டர் போடு படிச்சுட்டு
எங்கிட்ட கொடுனு “ பணத்தை கையில் கொடுத்தார். புக்கை ஆர்டர் போட்டு
நான்குநாட்களில் டெலிவரி ஆனது.
********************************
எனக்கு
வரலாற்றின் மீது அதீத ஆர்வம் இருப்பினும் , சோழ நாட்டில் பிறந்திருப்பினும் , அதுவரை சோழர்களின் வரலாற்றை அறிந்து கொள்ளும்
அவா ஏற்பட்டதே இல்லை .புத்தகம் முழுவதும் இராஜேந்திர சோழரே
ஆக்கிரமித்திருக்கிறார். அவரது துணைவியார்கள், மகன்கள், பைத்தியக்காரதங்கையால் போர் மூளும்
சூழல்வந்தியத்தேவர். அருண் மொழி, என அனைத்து கேரக்டர்களும் மனதில் நிற்கின்றன. முதல்
புத்தகம் போரின் தொடக்கம் வரை மட்டுமே சொல்கிறது.மொத்தம் நான்கு பாகங்கள் முதல்
பாகத்தை மட்டும். படித்துவிட்டு கூவுவதில் ஞாயமே இல்லை இருந்தாலும் புத்தகத்தில்
சில விஷயங்கள் என்னை பாதிக்கவே செய்தன.
*********************************
தற்பொழுது
நாம் உண்ணும் இட்லி ஆனது,”இடரிக”
என்னும் பெயரில் சோழர் காலத்திலேயே பரிமாறப்பட்டிருக்கிறது.மறவர் அந்தனர் என அந்த
காலத்திலே சாதிப்பிரிவினை இருந்திருக்கிறது. சாதி மோதல்களும் இருந்திருக்கின்றன
என்பது வியப்பே. பொற்காசுகள் “பொற்கழஞ்சுகள்” என அழைக்கப்பட்டுள்ளது. தற்பொழுதைய
மலேசியாவானது “கடாரம்” என
அழைக்கப்பட்டிருக்கிறது. சோழர் காலத்திலும் தற்பொழுது போலவே சீனத்து வணிகர்கள்
தான் தொல்லையாக இருந்திருக்கிறார்கள் . எனக்கு தெரிந்து பாண்டியர்கள்,
சேரர்கள், ஒட்டர்கள் , சாலுக்கியர்கள்
என வென்ற கையோடு கடல் கடந்து சென்று போர் புரிந்த ஒரே நாடு சோழ நாடுதான்.
குறிப்பாக சோழ மன்னன் இராஜேந்திரன் தான்.
இனி நானும் சோழ நாட்டுக் காரன் என
மார்தட்டிக் கொள்ளலாம்.ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் புல்லரிக்குது.
********************
கங்கை கொண்டசோழன்-பால
குமாரன்,
விசா பப்ளிக்கேசன்,விலை -450 ரூபாய் மட்டுமே
படித்து பயனடைவீர்....
A nice article and go on with these subjects
ReplyDeleteK machi sure♥♥♥
ReplyDelete