திருமயம் டூ பிள்ளையார்பட்டி டூ குன்றக்குடி..........


     அண்ணன் கருப்பையா வீட்டு கிரஹபிரவேசத்தை முடித்த கையோடு அடுத்ததாக எங்கே போகலாம்??? என யோசித்த போது இரவு வரும் பொழுது ஏதோ கோட்டை போல் ஒன்றை பார்த்தோமே? என்று வினவ .... ஆ.... அது திருமயம் கோட்டை அங்கே செல்லலாம் என்று முடிவாகியது. சுமார் இருபது நிமிட பயண தொலைவில் கோட்டை அமைந்திருந்தது. கோட்டை முகப்பில் நின்று பார்க்க கோட்டை கம்பீரமாக  காட்சியளித்தது. ..எப்படி கட்டியிருப்பார்கள் அந்த காலத்தில் என்று பிரமித்துபோனேன்...
ஏறக்குறைய 400 வருடங்களுக்கு முன்பு 1676 ல் ராம்நாட்டை ஆண்ட ராஜா விஜய ரகுநாத சேதுபதியால்  என்னும் கிழவன் சேதுபதியால்  கட்டப்பட்டிருக்கிறது. பிறகு இக்கோட்டை மருமகனான ரகுநாத ராய தொண்டைமானிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. கோட்டையானது வட்டவடிவில்  அமைந்துள்ளது. வெளிப்புற மதிற்சுவர்  ஆங்காங்கே சிதைந்தும்,பல இடங்களில் முற்றும் அல்லாமலும் காணப்பட்டது..ஏழு சுற்று சுவர்கள் இருந்ததாக அறிவிப்பு பலகையில் படித்தேன். ஆனால் பார்க்கத்தான் இயலவில்லை..
 கோட்டையில் எதிரெதிர் திசையில் பீரங்கிகள் அமைக்கப்பட்டிருந்தது. அதிலே இக்கோட்டை தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது.கோட்டை முழுவதும் காதலர்கள் தங்கள் பொற்பெயர்களை கரியாலும் சுண்ணக்கட்டிகலாலும் செதுக்கி வைத்திருந்தார்கள். பாவம் அவர்களின் செதுக்களுக்கு பீரங்கிகளும் தப்பவில்லை .வற்றாத சுனை ஒன்று உச்சியில் இருந்தது. நீர்த்தேங்கி இருப்பதையே சுனை என அறிந்த எனக்கு , இந்த சுனையில் விழுந்தா உன்ன காப்பாத்தவே  முடியாது  என அண்ணன் கருப்பையா திகிலூட்டினார். சுர்றிப்பார்த்துவிட்டு  போட்டோக்களாக எடுத்து தள்ளினோம்.  இவ்வாறாக சுமார் இரண்டரை மணி நேரம் சுற்றிவிட்டு அடுத்து எங்கே ? எனக்கேள்வி எழ  குன்றக்குடியும் ,பிள்ளையார்பட்டியும் அருகில் இருப்பது விசாரித்ததில் தெரிந்தது.
 முதலில் அண்ணனைப்பார்ப்பதா இல்லைத் தம்பியைப்பார்ப்பதா ? என்றக்குழப்பம் எழவே முதலில் மூத்தவரை வணங்கிவிட்டுப் பிறகு தம்பியைப்பர்த்துக் கொள்ளலாம் என நண்பன் கூற , நேராகப் பிள்ளையார்பட்டி பயணமானோம். அண்ணன் கருப்பையா அடிக்கடி மாயமாகிவிட  ஆங்காங்கே வெய்ட் செய்து பிக்அப் செய்யவேண்டியதாகிவிட்டது. சிறு பிள்ளைப்போல் நடந்து கொண்டார்.விநாயகரையும் முருகனையும் எந்த வித இடரும் இன்றி அமைதியாக தரிசித்துவிட்டு ,எல்லாரும் ஆல்கிளியர் ஆக வேண்டும் என வேண்டிக்கொண்டோம்...      

Comments

Post a Comment

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!