ஒரு பக்க கதை...-மூட நம்பிக்கை
குருஜி ஒருவர் நாய் ஒன்றை பாசத்தோடு வளர்த்து வந்தார். அதை எங்கே சென்றாலும் உடன் அழைத்துச்
சென்றார். நாயும் அவர் மீது பாசத்தோடு துள்ளி விளையாடிக்கொண்டிருந்தது.குருஜி தன்
சீடர்களுக்கு பாடம் எடுக்கும் வேளையிலும் நாய் அவர் மீது ஏறி அவரை தொந்தரவு
செய்துகொண்டிருந்தது.அதனால் நாயை அருகில் இருக்கும் தூணில் கட்டிப்போட
சொல்லிவிட்டு பாடம் எடுக்கத்தொடங்கினார்.கொஞ்ச நாளில் குருஜி உடல்நலம்
சரியில்லாமல் இறந்து போனார். நாயும் துக்கம் தாளாமல் இறந்து போயிற்று. குருஜிக்கு அடுத்த நிளையில்
இருந்த ஒருவர் குருஜி ஆனார். அவர் பாடம் எடுக்கும் முன் சுற்றும் முற்றும்
பார்த்தார். பின்னர் கோபத்தோடு சீடர்களிடம் நான் பாடம் எடுக்கும் போது தூணில் நாய் கட்டியிருக்க வேண்டும் என்று
உங்களுக்கு தெரியாதா? என்று கத்தினார். பின்னர் நாயை கொண்டு வந்து தூணில் கட்டியபிறகே
பாடம் எடுக்கத்தொடங்கினார். பாடம் எடுப்பதற்க்கும் தூணில் நாய்
கட்டியிருப்பதற்க்கும் என்ன சம்பந்தம்?????என்று சீடர்கள் மனதிற்க்குள் முனகினார்கள்.
பி.கு: ஏதோ எல்லோரும் ஒரு பக்க கதை எழுதுகிறார்களே என்பதற்காக அடியேனின் சிறுமுயற்சி...
ENNA SOLLA vara ipo???
ReplyDeleteRead again ...... u ll get the result
ReplyDelete