ஐ- ஒரு மெர்சல் அனுபவம்......
பொங்கல் களேபரங்களுக்கு மத்தியில் “ஐ” பார்கக போலாமா?? என்ற நண்பனின் குறுஞ்செய்தி சற்றே அதிர்ச்சி
அளித்தாலும் , ஏற்கனவே படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை விக்ரமும்
சங்கரும் ஏற்படுத்தி விட்டமையால் வீட்டில் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு கிளம்பினேன்.
ஏற்கனவே என் நண்பன் கணேஷை டிக்கட் எடுக்க பணித்திருந்தமையால் பாவம் ரேசன் கடை க்யூ
வைப்போல இருந்த c.r. theatre டிக்கட் கவுண்டரில்
நசுங்கி பிதுங்கி பால்கனி டிக்கட் (150 ரூபாய்) எடுத்து வைத்திருந்தான்.தியேட்டரில் நுழைந்து
சுமார் அரைமணி நேரம் கழித்து வேர்வை
மழையில் தொப்பலாக நனைந்து ஸ்க்ரீன் ஆன் ஆனதும் படம் தான் போடப்போகிறார்களோ என்று
நினைத்தால் அப்பொழுதுதான் வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சினார்கள். உள்ளூர்,மாவட்ட,மாநில,தேச,சர்வதேச என வகை வகையாக விளம்பரங்களை ஒளிபரப்பி படம்
பார்க்கும் பொறுமை இவனிடம் இருக்கிறதா என்று பரிசோதித்த பிறகே qube digital cinema feel the experience என்று படத்தை
துவக்கினார்கள். ஆரம்பமே U/A சர்டிபிக்கெட்
சங்கர் தனக்கே உரித்தன பாணியில் கிளாமரிலும் ஆக்-ஷனிலும் விளையாடி இருப்பதை உணர்த்தியது..
வழக்கமாக நாட்டுக்கு செய்தி சொல்லும் சங்கர் இதில் கோலிவுட்டின் டெம்ப்லேட் ஆன காதல், கடத்தல்,பொறாமை,நம்பிக்கை துரோகம், பழிவாங்கல் என்பதை தனக்கே உரித்தான பாணியில் பிரம்மாண்டமாய்
“அதுக்கும்மேல” என சொல்லியிருக்கிறார். 3 மணி நேர படத்திற்க்கு திரைக்கதை எவ்வளவுவிறுவிறுப்பாய்
இருந்திருக்க வேண்டும்.கொட்டாவி விட வைக்கிறார் சங்கர். இரண்டாம் பாதியில் நம் பொறுமையை
ரொம்பவே சோதிக்கிறார். விக்ரம் தேவை இல்லாமல் மெனக்கெட்டுவிட்டாரோ என்று தோன்றுகிறது.
அவரது உழைப்பை பாராட்டாவிட்டால் நா அழுகிவிடும்..மனிதர் பேய் தனமாக உழைத்திருக்கிறார்.
எமி சும்மா காட்டுவதோடு நிற்காமல் நடிக்கவும் செய்திருக்கிறார். கூனன் தான் விக்ரம்
என தெரிந்தும் கடைசிவரை காப்பாற்றுவதில் அவர்மேல் கொண்ட காதல். மெய் சிலிர்க்கவைக்கிறது.
தியேட்டரில்அப்லாஸ் அல்லுகிறார். கலை இயக்குநர் அட போட வைக்கிறார். ஒளிப்பதிவு அமேசிங்.
ரஹ்மானின்இசை சற்றே ஆறுதல்அளிக்கிறது. இருந்தாலும் அவரது பழைய பாடல்களை போல் இதயத்தில்
இடம் பெறுமா என்பது சந்தேகமே.பிரம்மாண்டம் என்பதைத் தாண்டி படத்தில் ஒன்றுமே இல்லை.
படத்தில் மெர்சல் ஆக்கியது
1.விக்ரம் –எமியின் நடிப்பு
2.கலை
3.பாடல் வரிகள் மற்றும் இசை
4.ஒளிப்பதிவு
5.ஜிம் பைட்
6.சந்தானம் காமெடி
7. பாடல்கள் காட்சிபடுத்தப்பட்ட விதம்
8.veta
workshop ன் கடின உழைப்பு
9.பவர் ஸ்டார்
10. computer graphics
கடுப்பு ஆக்கியது..
1.சங்கரின் கதைக்களம்
2.வழக்கமான வில்லன்கள்
3.திரைக்கதை
4.விக்ரமின் சென்னைத்தமிழ்
5.டிரெயின் பைட்
மொத்தமாக “ஐ” ஒன் டைம் வாட்ச்.........
Comments
Post a Comment