4 இயர்ஸ் ஆப் இன்ஜினியரிங் = 2 கோரைப்பாய்........
நாலு
வருஷமா இன்ஜினியரிங் படிச்சி என்னத்த டா கிழிச்ச–னு எவனாவது கேட்டா 2 கோரைப்பாய்னு
பதில் சொல்லுவேன்.ஆம் அடியேன் கடந்த நான்கு ஆண்டுகளாக
1.படிக்க இரவல் வாங்கிய ,
2.படிக்க காசு கொடுத்து வங்கிய,
3.பாரின் ஆத்தர் புக்ஸ்(பெரும்பாலும் தலையணையாய்
பயன்படுத்தப்பட்டவை),
4.ஜெராக்ஸ் போட்ட ஸ்டடி மெட்டீரியல்ஸ் ,
5. ரெபரஸ்க்காக சீனியரிடம் வாங்கிய பழைய
ரெக்கார்ட்ஸ் ,
6. இன்டர்னல் டெஸ்ட் பேப்பர்ஸ்,
7. கொஸ்டின் பேப்பர்ஸ்,
8. லேப் மேனுவல்ஸ்
9.லேப் அப்சர்வேசன்ஸ்
10.ரப் நோட்ஸ்
11. நான் எழுதிய ரெக்கார்ட்ஸ்
12. நான்குஆண்டுகளாக வாங்கிய குங்குமம், குமுதம், போன்ற மெகசின்கள்.
13. தினசரி செய்தித்தாள்கள்
14. இதர பேப்பர்ஸ்
என எல்லாவற்றையும் எடைக்கு போட்டதில் 430 ரூபாய்
தான் கிடைத்தது. இவை எல்லாவற்றையும் வாங்க ஜெராக்ஸ் போட ஆண்டுக்கு நான் செலவு
செய்தது 10,000 ரூபாய் என கணக்கு வைத்தாலும் 4 ஆண்டுகளில் சுமார் 40,000 ரூபாய் வருகிறது..... ஆனால் இவற்றைக் கொண்டு
அடியேன் தேர்வில் பாஸ் ஆனேனே தவிர பெரும்பாலான சப்ஜெக்ட் எதுவும் தற்பொழுது என்
நினைவில் இல்லை என்பது துயரமே.இவை எல்லாமும் சாப்ட் காப்பியாக என்னிடம் இருக்கும் போதும் நாளுக்கு பத்து மணிநேரம்,பன்னிரண்டு மணி நேரம் என எகிறிய பவர்கட் பிரச்சனையின் காரணமாகவே அடியேன்
ஜெராக்ஸ் போட வேண்டியதாகிவிட்டது.
ஒவ்வொரு தேர்வு முடிந்ததும் இவை என் ரூமில்
இடத்தை அடைத்து கொண்டிருந்தனவே தவிர எதற்க்கும் பயன்பட வில்லை. ஹவுஸ் ஓனர்
இப்புத்தகத்தை எல்லாம் பார்த்துவிட்டு “இந்த குப்பையை மொதல்ல எடைக்கு போடுங்க” என சத்தம் போடவே, இன்று புத்தகங்கள் அனைத்தும் பழைய புத்தக
கடைக்கு சென்று மோட்சம் எய்தின. மோட்சம் எய்தியதோடு 430 ரூபாய் சம்பாதித்து கொடுத்தன . அவற்றைக்
கொண்டே இரண்டு கோரைப்பாய்கள் வாங்கப் பட்டன....
4இயர்ஸ் ஆப் இன்ஜினியரிங் = 2
கோரைப்பாய்..
பின் குறிப்பு: இன்று என்னுடைய புத்தகங்களோடு பாஷா பாயின்
புத்தகங்களும் எடைக்கு போடப்பட்டன. இருவருடைய எடைக்கு போடப்பட்ட புத்தகங்களின் மொத்த கூட்டு தொகையே 430 ரூபாய் . இருவரும் சேர்ந்து இவற்றை வாங்க
செலவு செய்தது மொத்தம் (40,000+40,000=80,000) லட்சத்தை நெருங்குகிறது...... ஸ்ஸ்ஸ்ஸ் அப்பப்பா.....
“”உலகத்துல எவ்வளவோ கோர்ஸ் இருக்கும் போது நான்
ஏன் டா இன்ஜினியரிங்க சூஸ் பண்ணேன்.””” இது தான் இப்ப மைன்ட் புல்லா வோடுது....
sara avlo vanduda da... appa nan 7 yrs a sethu vechiruken...evlo varum... good suggestion
ReplyDelete600 varum
ReplyDelete