new year resolution
புத்தாண்டின் துவக்கத்தில். . .
கடந்த ஆண்டை நினைத்துப் பார்க்கிறேன்...பெரிதாக எதையும் சாதிக்கவில்லை... கடந்த ஆண்டுகளைப் போல இதுவும் ஒரு வெற்று ஆண்டாக வே முடிந்து போனது சற்று வருத்தமளிக்கிறது. இருந்தாலும் past is past என்று future ல் நுழைகிறேன்.. வந்திருக்கும் ஆண்டு எண்ணற்ற சவால் களை தன்னகத்தே சுமந்து நிற்கிறது(கொஞ்சம் ஓவர்லோடு தான்).பைனல் இயர் கடைசி செமஸ்டர் வேறு .. பெருசுங்களாம் இப்பவே காம்பஸ்(sorry campus interview tan) ல செலக்ட் ஆகிட்டியானு கேட்க ஆரம்பிச்சிடுச்சுங்க ... போதாக்கொறைக்கு பக்கத்து வீட்டு புள்ள வேற infosys ல place ஆகிடுச்சு... இனி சொல்லவாவேனும்.. நம்ம பாடு நாயி சேகர் -அ விட மோசமாக போகுது.. இந்த வருசம் ஏதாச்சும் ரெசல்யூசன் எடுத்தாகனு மே.....அவற்றுள் சில கீழே...
1.ஹிந்தி கத்துக்கனும்
2.டெயிலி டைரி எழுதனும்
3.நிறைய படம் பாக்கனும்
4..மாசம் ஒரு புத்தகமாவது படிக்கனும்
5.காலை ல 5 மணிக்கு எழனும்
6.மாதம் எதாவது ஒரு இடத்துக்கு outing போகனும்
7.டெயிலி ஒரு மணி நேரம் மௌனமா இருக்கனும்
8.பேஸ்புக் பயன்பாட்டை குறைக்கனும்
9.மாமிச பயன்பாட்டை குறைக்கனும்
10. டெயிலி 20 ரூபாய் சேமிக்கனும்
11.உடற்பயிற்ச்சிய தொடரனும்
.....ஸ்ஸ் அப்பப்பா...இன்னும் நிறைய இருக்கு
இதுல 3,6 ஐ தவற மத்ததலாம் தொடருமா.......??????பொறுத்து இருந்து இருந்துதான் பாக்கனும்.....
Comments
Post a Comment