நோ மீன்ஸ் நோ பாடிய அரபுக்கிளி..!
என்றோ போலீஸ் டிரைனிங் அகாடமியில், காம்பவுண்ட் சுவர் இல்லாத காலத்தில், மாடுகள் நுழைந்து அங்கு வளர்த்துவந்த செடிகளைத் துளிர்விட துளிர்விட பகலிரவுப் பார்க்காமல் தின்று வைக்க, அவை மேற்கொண்டு மேய்ந்துவிடாமல் தடுக்கும் பொருட்டு பெயர் தெரியாத உயராதிகாரி ஒருவரின் உத்தரவின் பேரில் தினம் ஒரு காவல் அதிகாரி மாடுகளை விரட்ட காவலுக்கு நிற்க வைக்கப்பட, அந்தச் செடி மரமாகிவிட்ட இன்றும் ஒரு போலீஸ்காரர் இரவுகளில் மரத்தடியில் நின்றுகொண்டிருப்பார். ஏன் நிற்கிறார் என்று அவருக்குத் தற்பொழுது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உயரதிகாரி நிற்கச்சொன்னார் அதனால் நிற்கிறார். இந்தக்காட்சி டாணாக்காரன் படத்தில் வரும். ஏன்? எதற்கு? என்றெல்லாம் அதிகாரிகளிடம் கேட்க முடியாது. அதிகாரி சொன்னால் கேட்க வேண்டும். அவ்வளவு தான். அரசு இயந்திரம் என்று சும்மாவா சொன்னார்கள். உயர் அதிகாரிகளின் கட்டளையே சாசணம். அதை எதிர்த்து பேசிய பட்டாபியின் நிலையையும் அந்தப் படத்தில் பார்த்தோம் அல்லவா! அதே போல் தான் எங்கும். அதிகாரி சொன்னால் பால் கசக்கும் என்று கூட ஆமோதிப்பார்கள். கொரானா நேரத்தில் நாளொரு உத்தரவு, மணிக்கொரு மாற்றம் என விம...