2023−ல் என்ன கழட்டினேன் மற்றும் 2024-ல் என்ன கழட்டப்போகிறேன்!!!
எல்லா வருடமும் குறிப்பிட்டுச் சொல்ல சில சாதனைகளோ, துன்பியல் நிகழ்வுகளோ ஏதாவது ஒன்றாவது மெமரி குடோனில் இருக்கும். ஆனால், இந்த 2023−ஆம் ஆண்டுதான் எந்தவித பேரின்பமும், பெருந்துன்பமும் தராமல் தன்னளவில் வந்தான் போனான் வகையறாவாகவே அமைந்தது. பொட்டிப்படுக்கையை மிகக்குறைவாகவே கையில் சுருட்டிக்கொண்டு பயணம் கிளம்பியிருக்கிறேன். ஜி அளவுக்கு பயணமெல்லாம் நமக்கு ஆண்டுதோறும் அமைந்ததில்லை,அமைவதுமில்லை,அமையப்போவதும் இல்லை. 2023−ல் செய்த முக்கியப் பயணமென்றால் தொடர்ந்து இரண்டாவது முறையாக குவைத் சென்று வந்தது மட்டும் தான் தேறும். அதுவும் வேலை நிமித்தமாகத்தான். இருந்தாலும் கடந்த ஆண்டைப்போல் இல்லாமல் இந்த ஆண்டு குறைந்தபட்சம் குவைத்தைச் சுற்றிப்பார்க்க முடிந்தது பேராச்சரியம். பஞ்சதந்திரம் கமல் கேங் போல நல்ல நண்பர் வட்டம் அமைந்தது. நிமிடந்தோரும் சிரிப்புமழை. வாயைத் திறந்தாலே, மூடிட்டு இருடா ல** என பங்கமாய் கலாய்த்துத் தள்ளிவிட்டார்கள். கூட்டாகச் செய்த பெயர் சூட்டும் சம்பவங்கள் தான் மிகக்கொடூரம். நூடுல்சிற்கு மண்புழு என்று பெயர் வைத்ததாகட்டும், தலைக்கவசத்திற்கு மண்டையோடு என்று பெயர்சூட்டியதாகட்டும்,தக்காளி...