Posts

Showing posts from September, 2024

சால்ட்டுமா..!!

சில வார்த்தைகள் நெருஞ்சி முள் போல் தைக்கும், சிலது ரோஜா போல் இனிக்கும். இன்று அவனைத் தைத்தது நிச்சயம் நெருஞ்சி முள் தான். இரண்டு மணி நேரம் சண்டைக்காட்சிகளால் ஆன படத்தைப் பார்த்துவிட்டு வந்தால் யாரையாவது பிடித்து அடித்து மண்டையை உடைத்தால் தேவலாம் என்பது போல் இருக்குமே ஒரு மனநிலை, அந்த மனநிலையில் தான் இருந்தான். அவ்வார்த்தையைக் கேட்டதில் இருந்து. தலையில் யாரோ சுத்தியை வைத்து நங்நங்கென்று அடிப்பது போல் இருந்தது. ரமண மகரிஷி போல், நான் யார்? எதற்காக வாழ வேண்டும்? என்றெல்லாம் கேட்டுக்கொண்டான். எச்சில் கூட விழுங்கப் பிடிக்கவில்லை. அவ்வார்த்தைத் தொண்டைக்குழியை பட்டர்பிளை வால்வு போல அடைத்துவிட்டது. வாழ்க்கையின் மீதே வெறுப்பு வந்துவிட்டது. எதற்காக வாழ வேண்டும் என மீண்டும் மீண்டும் யோசித்தான். தலைவலி. சுருக் சுருக். அவ்வார்த்தையைக் கேட்டுத்தொலையாமல் இருந்திருக்கலாம். ஒரு நிமிடம் சாவது குறித்துக்கூட யோசிக்கலானான். எப்படி தற்கொலை செய்து கொள்ளலாம் என எண்ணங்கள் விரிந்தது. சட்டென்று அவ்வார்த்தை நினைவில் தோன்றி மறைய, அதையும் வெறுத்தான். தொலைக்காட்சியில் யாரோ எதையோ சாதித்த செய்தி கேட்டது, இந்தப் *@%# ம...