கர்நாடகா வெர்ஸஸ் தமிழ்நாடு பார்ட்- 2
* Good day biscuit க்கு லாம் போட்டியா இங்க 5 ரூபாய்க்கு ஒரு பிஸ்கட் விக்குறானுங்க ... good day ல கூட முந்திரி இருக்காது ஆனா நம்ம 20-20 ( biscuit name ) ல ஒவ்வொரு பிஸ்கட்டுலயும் முந்திரி தான் . கர்நாடகால கிடைக்கிற நல்ல விஷயத்துல இதுவும் ஒன்னு. சில , இல்ல பல வேளைகளில் வெறும் பிஸ்கட்ட மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். Thank u twenty twenty…. * நம்ம ஊர் டூவீலர்லலாம் சைட்ல ஒரு பொட்டி இருக்கும் , இங்க இவனுங்க டூவீலர்லலாம் சரவணா ஸ்டோர்ல 1000ரூபாய்க்கு மேல துணிவாங்குனா தருவாங்களே ஒரு பேக் (bag) , அந்த பேக்க சைட்ல மாட்டிக்கிட்டு சுத்துறானுவோ...!!!! என்னமா இப்படி பன்றீங்களேமா.....!! * நம்ம ஊர்ல ரசம்னு ஒன்னு வைப்பானுங்களே , அது இவனுங்களுக்கு என்னனே தெரியலை ……… அதுக்கு மேல பொறியல் , எங்கயாவது ...