ஒரு ஒப்பீடு- தமிழ்நாட்டு வாழ்க்கையும் , கர்நாடகா வாழ்க்கையும் .....
அடியேன் தமிழ்நாட்டில் இருந்த வரை தமிழ்நாட்டை ஒரு பொருட்டாக எண்ணியதே இல்லை . தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்கள் அனைத்தும் பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, நகரமயமாக்கல் என அனைத்திலும் முன்னணியில் இருப்பதாகவும். நம் மாநிலம் மட்டும் பின் தங்கி இருப்பதாகவும் எண்ணி வருந்திக்கொண்டிருந்தேன். எப்படியாவது தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் , பிற மாநிலங்கள் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டும் என எண்ணம் கொண்டிருந்தேன். நான் தமிழகத்தில் பிறந்திருக்காவிட்டால் என் வாழ்க்கை முறை எவ்வாறெல்லாம் இருந்திருக்கும் என கற்பனை செய்துக்கொண்டிருந்தேன்.
கர்நாடகாவில் வேலைகிடைத்த்தும்
ஆய் ஊய் என குதித்துக் கொண்டிருந்தேன். இனி என்ட ஸ்டேட் கர்நாடகா , என்ட மொழி
கன்னடா , என்ட
சி.எம் சித்தராமையா, என்ட ஹீரோ புனித் ராஜ்குமார் என அதகளம் செய்துக்கொண்டிருந்தேன். இத்தனைக்கும்
காரணம் அடியேன் ஒட்டு மொத்த கர்நாடகாவையும் பெங்களூரு போல் இருக்கும் என எண்ணியதே !!
எத்தனை அறியாமை !!!! “என்ன கொடுமை சரவணா ??”, என புலம்ப வைத்துவிட்டார்கள்
. இக்கரைக்கு அக்கரை பச்சை ( தமிழ்நாட்டுக்கு கர்நாடகா பெட்டர்) என்ற என் எண்ணத்தில்
தீயை வைத்துப் பொசுக்கிவிட்டார்கள்.அதற்கான காரணத்தை தான் இதன் பின் படிக்கப்போகிறீர்கள்.
# முதலாவதாக வாழை இலை, தமிழகத்தில் பொட்டிக்கடையில் ஆரம்பித்து
,3 ஸ்டார் , 4 ஸ்டார் , 5 ஸ்டார் என அனைத்து ஸ்டார் ஹோட்டல்களிலும் வாழை இலையில் உணவு பரிமாறுவதை
கவனிக்கலாம் , உணவு சுவையாக இருக்கிறதோ இல்லையோ வாழை இலையில்
சாப்பிடுவதே தனி சுகம். இங்கு வாழை இலை என்றால் என்ன வென்று கேட்கிறார்கள். எல்லாம்
பேப்பர் பிளேட் சமாச்சாரங்கள் தான். கண்ணுக்கு எட்டும் தொலைவு வரை ஒரு வாழை மரமும்
இல்லை , ஆனால் வாழைப்பழம் கிடைக்கிறது,
அனேகமாக தமிழகத்திலோ அல்லது கேரளாவிலோ தரவிறக்கம்
செய்யப்பட்டிருக்கலாம். இங்கு வந்ததில்இருந்து மனதில் தோன்றிய ஒரு புது மொழி “ வாழைமரம்
இல்லா ஊரில் இனி வாழ வேண்டாம் என்பதே !!!”
# இரண்டாவதாக கேரி பேக்( carry bag ): தமிழகத்தில் ஒவ்வொரு
கலர்கேரி பேக்கிற்க்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது , ஒருவித அர்த்தத்தோடே
பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக கருப்பு வண்ண கேரி பேக் மதுபானம், சிக்கன்,மட்டன், மீன் , முட்டை போன்ற அசைவ மற்றும் வெளி உலகத்திற்க்கு தெரியாமல் கொண்டு செல்ல வெண்டிய
பொருட்களை எடுத்துச்செல்லவே பயன்படுத்தப்படுகிறது.
மற்ற நிறங்களுக்கும் தனித்தனி அர்த்தம் இருக்கிறது. இங்கு கேரி பேக் என்றாலே கருப்பு
வண்ணம் தான். அதில் எதை வாங்கிக்கொண்டு வந்தாலும் ஏதோ ரகசியப்பொருள் ஒன்றை வாங்கி வருவதாகவும்
, மக்கள் எல்லோரும் என்னையும் என் கேரி பேக்கையும் நோட்டம் இடுவதாகவும்
தோன்றிக் கொண்டிருக்கிறது. கேரி பேக் கலரைமாத்துங்க
டா...!!!
மற்ற காரணங்களை அடுத்தடுத்த வலைப்பதிவில் பகிர்ந்துக்கொள்கிறேன்.


Comments
Post a Comment