college to job



மாற்றம் ஒன்றே மாறாதது...
     நிதர்சனமான உண்மை ... ஒரு மாதத்திற்கு முன்பு வரை ஒரு கல்லூரி மாணவனாய் எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் ஊர் சுற்றிக்கொண்டிருந்தேன். கடைசி நேரத்தில் வேலைப் பற்றிய பயம், படித்து முடித்தவுடன் என்ன செய்யப் போகிறோம் என்பது போன்ற கேள்விகள்  மனதைப்பிசைந்துக் கொண்டிருந்தது. நல்ல வேளை அடியேன் கல்லூரியில் சேர்ந்த நாள் முதல் சீனியர்களோடு நல்ல நட்பை உருவாக்கி வைத்திருந்தேன். சில மாதங்களாக இடைவிடாது மனதை பிசைந்த ஒன்று நமக்கு வேலை கிடைக்குமா? என்பது தான். ஆழ்ந்த யோசனையில் மதிய உணவு உண்டு கொண்டிருந்த வேளையில் ஒரு புதிய நம்பரில் இருந்து அழைப்பு, அட்டென்ட் செய்தேன், யார் என்று கேட்ட பொழுது கார்த்திடா, உன் சீனியர்டா, என்று எடுத்துரைத்தார். நான் அடையாளம் கண்டுகொண்டேன். தம்பி நாளைக்கு இன்டர்வீவ் இருக்கு அட்டண்ட் பன்றியாடா? எனக் கேட்டார். நான் அதிர்ச்சியில் இருந்தேன்.ஒரு வித தயக்கத்தோடு சம்மதம் தெரிவித்தேன். உடன் சிலரை அழைத்து வர சொன்னார்கள். பலரைத் தொடர்பு கொண்ட பிறகு பாஷா பாய் மட்டும் உடன் வருகை புரிந்தான்.





இருவரும் ஒருவழியாக பாசாகி, யுனிவர்சிட்டி எக்ஸாம் முடித்த கையோடு அடுத்த நாளே கர்நாடகா புறப்பட்டோம். வந்து வேலையிலும் சேர்ந்தாகிவிட்டது.நான் எதிர்பார்த்தற்கு மாற்றான  வேலை. இன்ஜினியர் என மனதிற்க்குள் உருவகம் செய்திருந்த அத்தனை எண்ணத்தையும் புரட்டிப் போட்டுவிட்டது..சாதாரண அடிமட்ட வேலையில் ஆரம்பித்து கம்ப்யூட்டர் வரை  அத்தனையும் இயக்க வேண்டியதாகி உள்ளது.  ஒரு வருடம் எப்படியாவது இங்கு அட்ஜஸ்ட் செய்து என்னுடைய ஆசைகள் சிலவற்றை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என எண்ணி இருக்கிறேன். முதலாவது ஒரு DSLR கேமிரா, இரண்டாவது மொபைல்,மூன்றாவது பைக் . இவற்றுள் எவை எல்லாம் நிறைவேற்ற போகிறேன் எனத்  தெரியவில்லை.....

ஆசைகளுடன்
சரவணா

Comments

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!