Posts

Showing posts from April, 2023

நிலையாமை...!!

சைவ இலக்கியங்கள் யாவும் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என அப்பட்டமாக எடுத்துக்காட்டுபவை. எதுவுமே இந்த உலகில் நிரந்தரம் இல்லை என்பதே அவற்றின் அடிநாதம். வாழ்வில் நிலையாமை  ஒன்றே நிரந்தரம் என்பதை  சைவ இலக்கியங்களைப் படித்த ஒருவனால் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.  பணம்,பொன்,பெண்,பொருள் என்ற மாயைகளில் இருந்து எளிதாக வெளிவர முடியும். ஆனால், இன்று சைவத்தைப் போதிக்கும் கஞ்சா புகழ் சாமியார்கள் அத்தனைக்கும் ஆசைப்படு என இயற்கைக்கு எதிராய் வடை சுட்டு விற்றுக்கொண்டுள்ளார்கள்.  நிலையாமை என்பதை போதிப்பதே பக்தி.ஆனால், இங்கு கடவுளை முன்னிறுத்தி கலவரம்,வன்முறை,பாகுபாடு,நில அபகரிப்பு என சகலத்தையும் பக்தர்கள் முன்னின்று நடத்திக்கொண்டுள்ளார்கள்.  இவ்வுலகத்தில் இருப்பவை எல்லாம் நிலையானது, நம்மிடம் இருக்கும் செல்வம்,சொத்து எல்லாம் எப்பொழுதும் நம்மிடமே இருக்கும் என்கிற நினைப்புத்தான் ஆணவத்திற்கு வழிவகுக்கும். மானுடப்பதர்களாகிய நம்முடைய அந்த ஆணவத்திற்கு கசையடி கொடுக்கத்தான் இலக்கியங்கள் நிலையாமையை முக்கியக் கருப்பொருளாகப்பேசின.  ஆனால், இன்று அதையெல்லாம் கேட்பாரில்லை. என்ன சொல்கிற...

சப்டைட்டில்...!!!

இடம் அறிந்து பொருள் கொள்க போலவே, தேவை அறிந்து சப்டைட்டில் போடுக..!!என கூவ வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆம், முழுக்க முழுக்க தமிழர்களால் பார்க்கப்படும் படத்திற்கு இங்கே ஓமானில் அரபி மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் சப்டைட்டில். பெண்களின் அழகிய சிறுத்த இடையை மறைக்கும் கைப்பை போல அரைத்திரையை மறைத்தவாறு வந்து தொலைக்கிறது சப்டைட்டில். அதிலும் பெரிது பெரிதான எழுத்துருக்களில். படத்தை நிம்மதியாகப் பார்க்க முடியவில்லை.குறிப்பாக தமிழ் வசனத்தை அப்படியே கூகுள் டிரான்ஸ்லேட்டரில் போட்டு மொழி பெயர்த்திருப்பார்கள் போல. கண்றாவியான, தவறான மொழிபெயர்ப்பு. மேலே 500 கோடி என்று பேசிக்கொண்டிருந்தால் கீழே 9500 கோடி என தவறாக சப்டைட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ் படத்தை பிற மொழிக்காரர்கள் பார்க்க வருகிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும் அவர்களுக்கு ஆங்கில சப்டைட்டில் மட்டும் போதுமே. அரபி வேறு ஓடிக்கொண்டிருக்கிறது. பிற மொழித் திரைப்படம் பார்க்க விரும்பும் அரபிக்களில் பெரும்பாலானவர்கள் போதுமான ஆங்கில அடிப்படைத் தெரிந்தவர்கள் தான். எதற்காக இரண்டு சப்டைட்டில் திரையை அடைத்துக்கொண்டு வர வேண்டும். அதுவும் நல்லிரவு ...