சப்டைட்டில்...!!!

இடம் அறிந்து பொருள் கொள்க போலவே, தேவை அறிந்து சப்டைட்டில் போடுக..!!என கூவ வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆம், முழுக்க முழுக்க தமிழர்களால் பார்க்கப்படும் படத்திற்கு இங்கே ஓமானில் அரபி மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் சப்டைட்டில். பெண்களின் அழகிய சிறுத்த இடையை மறைக்கும் கைப்பை போல அரைத்திரையை மறைத்தவாறு வந்து தொலைக்கிறது சப்டைட்டில். அதிலும் பெரிது பெரிதான எழுத்துருக்களில். படத்தை நிம்மதியாகப் பார்க்க முடியவில்லை.குறிப்பாக தமிழ் வசனத்தை அப்படியே கூகுள் டிரான்ஸ்லேட்டரில் போட்டு மொழி பெயர்த்திருப்பார்கள் போல. கண்றாவியான, தவறான மொழிபெயர்ப்பு. மேலே 500 கோடி என்று பேசிக்கொண்டிருந்தால் கீழே 9500 கோடி என தவறாக சப்டைட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ் படத்தை பிற மொழிக்காரர்கள் பார்க்க வருகிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும் அவர்களுக்கு ஆங்கில சப்டைட்டில் மட்டும் போதுமே. அரபி வேறு ஓடிக்கொண்டிருக்கிறது. பிற மொழித் திரைப்படம் பார்க்க விரும்பும் அரபிக்களில் பெரும்பாலானவர்கள் போதுமான ஆங்கில அடிப்படைத் தெரிந்தவர்கள் தான். எதற்காக இரண்டு சப்டைட்டில் திரையை அடைத்துக்கொண்டு வர வேண்டும். அதுவும் நல்லிரவு பதினொன்றரை மணி காட்சிக்கு. திரைப்படம் பார்ப்தற்குண்டான மனநிலையையே கொத்தி கொத்தரவங்காய் போட்டுவிடுகிறார்கள். இது குறித்து யாரிடம் முறையிடுவது என்று வேறு தெரியவில்லை. விசாரித்து ஒரு மின்னஞ்சலைத் தட்டி விட வேண்டும். பிறமொழிக்காரர்களுக்கு வேண்டுமானால் சிறப்பு காட்சி ஒன்று பல்வேறு மொழி சப்டைட்டிலுடன் முழுத்திரையையும் மறைத்தவாறு போட்டுக்கொள்ளட்டும். அர்த்த ராத்திரியில் இப்படி எங்களை புலம்ப வைக்க வேண்டாம். 

Comments

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!