Posts

Showing posts from 2024

சால்ட்டுமா..!!

சில வார்த்தைகள் நெருஞ்சி முள் போல் தைக்கும், சிலது ரோஜா போல் இனிக்கும். இன்று அவனைத் தைத்தது நிச்சயம் நெருஞ்சி முள் தான். இரண்டு மணி நேரம் சண்டைக்காட்சிகளால் ஆன படத்தைப் பார்த்துவிட்டு வந்தால் யாரையாவது பிடித்து அடித்து மண்டையை உடைத்தால் தேவலாம் என்பது போல் இருக்குமே ஒரு மனநிலை, அந்த மனநிலையில் தான் இருந்தான். அவ்வார்த்தையைக் கேட்டதில் இருந்து. தலையில் யாரோ சுத்தியை வைத்து நங்நங்கென்று அடிப்பது போல் இருந்தது. ரமண மகரிஷி போல், நான் யார்? எதற்காக வாழ வேண்டும்? என்றெல்லாம் கேட்டுக்கொண்டான். எச்சில் கூட விழுங்கப் பிடிக்கவில்லை. அவ்வார்த்தைத் தொண்டைக்குழியை பட்டர்பிளை வால்வு போல அடைத்துவிட்டது. வாழ்க்கையின் மீதே வெறுப்பு வந்துவிட்டது. எதற்காக வாழ வேண்டும் என மீண்டும் மீண்டும் யோசித்தான். தலைவலி. சுருக் சுருக். அவ்வார்த்தையைக் கேட்டுத்தொலையாமல் இருந்திருக்கலாம். ஒரு நிமிடம் சாவது குறித்துக்கூட யோசிக்கலானான். எப்படி தற்கொலை செய்து கொள்ளலாம் என எண்ணங்கள் விரிந்தது. சட்டென்று அவ்வார்த்தை நினைவில் தோன்றி மறைய, அதையும் வெறுத்தான். தொலைக்காட்சியில் யாரோ எதையோ சாதித்த செய்தி கேட்டது, இந்தப் *@%# ம...

2023−ல் என்ன கழட்டினேன் மற்றும் 2024-ல் என்ன கழட்டப்போகிறேன்!!!

Image
எல்லா வருடமும் குறிப்பிட்டுச் சொல்ல சில சாதனைகளோ, துன்பியல் நிகழ்வுகளோ ஏதாவது ஒன்றாவது மெமரி குடோனில் இருக்கும். ஆனால், இந்த 2023−ஆம் ஆண்டுதான் எந்தவித பேரின்பமும், பெருந்துன்பமும் தராமல் தன்னளவில் வந்தான் போனான் வகையறாவாகவே  அமைந்தது. பொட்டிப்படுக்கையை மிகக்குறைவாகவே கையில் சுருட்டிக்கொண்டு பயணம் கிளம்பியிருக்கிறேன். ஜி அளவுக்கு பயணமெல்லாம் நமக்கு ஆண்டுதோறும் அமைந்ததில்லை,அமைவதுமில்லை,அமையப்போவதும் இல்லை. 2023−ல் செய்த முக்கியப் பயணமென்றால் தொடர்ந்து இரண்டாவது முறையாக குவைத் சென்று வந்தது மட்டும் தான் தேறும். அதுவும் வேலை நிமித்தமாகத்தான். இருந்தாலும் கடந்த ஆண்டைப்போல் இல்லாமல் இந்த ஆண்டு குறைந்தபட்சம் குவைத்தைச் சுற்றிப்பார்க்க முடிந்தது பேராச்சரியம். பஞ்சதந்திரம் கமல் கேங் போல நல்ல நண்பர் வட்டம் அமைந்தது. நிமிடந்தோரும் சிரிப்புமழை. வாயைத் திறந்தாலே, மூடிட்டு இருடா ல** என பங்கமாய் கலாய்த்துத் தள்ளிவிட்டார்கள். கூட்டாகச் செய்த பெயர் சூட்டும் சம்பவங்கள் தான் மிகக்கொடூரம். நூடுல்சிற்கு மண்புழு என்று பெயர் வைத்ததாகட்டும், தலைக்கவசத்திற்கு மண்டையோடு என்று பெயர்சூட்டியதாகட்டும்,தக்காளி...