பாஸ்போர்ட் –சம்மக்சல்லோ.....
பொதுவாகவே மத்திய , மாநில அரசு வழங்கும் எந்த ஒரு அடையாளச் சான்றையும் அவ்வளவு எளிதாக நாம் பெற்று விட முடியாது. அப்படி இருந்தும் நம் மக்கள் அதைப் பெற்று விட , முந்தின நாளே சென்று அட்வான்ஸ் புக்கிங் முறையில் அலுவலக வாயிலிலேயே உறங்கி எழுந்து அடித்து பிடித்து பல்வேறு தள்ளு முள்ளுகளுக்கு பிறகே வாங்கி வந்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இந்த ஆதார் கார்டு வாங்க அடியேன் பட்ட அவஸ்தைகள் சொல்லி மாளாது. நான் ஆப்பிரிக்காவில் பிறந்திருந்தால் எவ்வாறு இருப்பேன் என்பதை எந்த ஒரு நவீன சாப்ட்வேர் உதவியும் இன்றி படம் பிடித்திருக்கிறார்கள். அட எம்புட்டு அழகா இருக்கேன் தெரியுமா ???!!! நவீன காதல் கண்மணிகள் என்னைப் பர்த்தால் அப்படியே லிவிங் டூ கெதர்க்கு அழைத்து விடுவார்கள் !!!!! என் வாழ்நாளில் அவ்வளவு மோசமாக என்னை நான் பர்த்தது இல்லை. விட்டுத்தள்ளுங்கள் நாம் பாஸ்போர்ட் பக்கம் வருவோம். புதுசா பாஸ்போர்ட் வாங்கனும் ?? இது தான் அடியேன் தொடுத்த கேள்வி. எல்லோரும் வழங்கிய பதில் ஆன்லைன்-ல ரிஜிஸ்டர் செய்யனும்.அங்கேயே அடியேன் பதறிவிட்டேன். நம...