நாங்கள் சற்றும் எதிர்பார்க்காத ஒன்று....farewell



இனம் புரியாத மகிழ்ச்சி....
அடக்கி வைத்த கண்ணீர் ....
பூட்டி வைத்த வார்த்தைகள்...
தணிந்த கோபக்கனல்...
இணைந்தோம் பிரிவில் ஒன்றாய் ....
எல்லாப் பெருமையும் எங்கள் ஜூனியர் சகாக்களையே சேரும்.. அடியேன் ஜூனியர்களை ஒரு பொருட்டாக எண்ணியதே இல்லை....அவர்களில் எனக்கு தெரிந்தது வெகு சிலரே.... farewell அண்ணா எல்லாரும் வந்துடுங்க என்று அழைக்கும் போதே, எனக்குள்  சிறு தயக்கம்... இவனுங்கள நமக்கு யாரு என்னனே தெரியாது...போனாலும் ஒன்னு தான் போகாட்டியும் ஒன்னு தான்…..என மனதிற்க்குள் எண்ணி இருந்தேன்.  ஹர்ஷவர்தனின் விடாப்பிடியான பாசத்தின் விளைவாகவே  செல்வது என முடிவானது....இந்த டிரஸ்கோட் (dress code) என்ற புது கலாச்சாரத்தை வேறு உருவாக்கிவிட்டார்கள்,பாதி பேர் வேஷ்டியில் ( சும்மா பந்தாவுக்கு கேட்டால் நம்ம பாரம்பரியம் என்று பீலா விடுவார்கள் ) வருவது என முடிவெடுத்தோம். மீதி பேர பத்தி நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை...
     சிறிய பிளாஷ்பேக்......... farewell செல்ல தயங்கியதற்கு மற்றுமொரு காரணம் , நாங்கள் freshers party என்ற ஒன்றை எங்களது ஜூனியர்களுக்கு
நடத்தவில்லை, மேலும் எங்களது சீனியர்களுடன் நடந்த யுத்தத்தால் அவர்களுக்கு பிரிவு உபசரிப்பு என்ற ஒன்றை நடத்தவேயில்லை,பிறகு எவ்வாறு அவர்கள் அழைத்தவுடன் செல்ல மனம் வரும், இருந்தாலும் எங்களது ஜூனியர்களை நினைத்து பெருமைப்படாமல் இருக்க முடியவில்லை... ரொம்ப நல்லவைங்கடா நீங்க...!!! எங்களை ஒன்று சேர்த்துட்டீங்க...!!!!!
     காலை பத்து மணிக்கு ஆரம்பம் என்று சொல்லி 11 மணி வாக்கில் தான் துவக்கினோம்,குருசார் குடும்பத்தோடும்,மற்ற ஆசிரியர்கள் குழந்தைகளோடும் வருகை புரிந்திருந்தார்கள்,எங்களுக்குள் சிறு அச்சம் இவங்களை  வச்சுக்கிட்டு என்னத்த என்சாய் பன்றது என எண்ணிக் கொண்டிருந்தேன்,பரவாயில்லை எங்களுக்கு எந்த வித இடையூரையும் கொடுக்கவில்லை, ஓரளவுக்கு கம்பெனிக் கொடுத்தார்கள்,ஸ்டாலின் சார் சற்று உணர்ச்சிகரமாகப் பேசினார்,தாய் தந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். ரங்கசாமி சார் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் .அவரது நேர்மைக்கு கிடைத்த அங்கீகாரம் பற்றி பேசினார்.ஜெயா மேம் அஸ் யூஸ்வல் கஷ்டப்படனும், ஹார்டுவொர்க் பன்னனும்,விளையாடுத்தனமாக இருக்காதீங்க என அட்வைஸ் வழங்கினார்கள். வெங்கடேசன் சார் சற்று வருத்தம் கொண்டார், இதில் ஹைலைட் குருசார் தன் கல்லூரி காலத்தில் தான் ஒரு கடலை மன்னன் என்பதை ஒத்துக்கொண்டார்,இருந்தாலும் அவர் கூறியது முற்றிலும் மெய்தானா என ஐயம் எழுகிறது....... ஆண்-பெண் நட்பை விட .ஆண் -ஆண்  நட்பு தான் நீடிக்கும் என சத்தியம் செய்தார், அடியேன் இந்த கருத்தை முற்றிலுமாக மறுக்கிறேன். இது  ஒரு ஆழமில்லா வார்த்தை .....
     பிறகு மதிய உணவு வழங்கப்பட்டது, சப்பாத்தி,சாதம்,இருவகையான பொறியல், கேசரி, அப்பளம், ஐஸ்கிரீம் வழங்கப்பட்டது. மகிழ்ச்சியில் நிறைய உண்ண முடியவில்லை ,எனன காரணம் என்று தெரியவில்லை  கோவா சென்று வந்த பிறகு மாலதியும் நானும் சுத்தமாக  பேசுவதை நிறுத்திக் கொண்டோம், ஏன் எனத் தெரியவில்லை , காரணமே இல்லாமல் இவ்வாறு தான் பல உறவுகளை தொலைத்துவிடுகிறோம் ,என்ன ஆனாலும் பரவாயில்லை  இன்னைக்கு என்ன  கோபம் என  கேட்டுவிட வேண்டும் என்று முடிவெடுத்து கேட்டுவிட்டேன்...... பரஸ்பரம் இருவரும் சாரி கேட்டுக்கொண்டோம், ஏனென்றால்  நாங்கள் பேசாமல் இருந்ததற்கு ஒரு உருப்படியான காரணமும் இல்லை, அதே போல் தான் ஹனீப் மற்றும் நிதினிடம்  காரணமே இல்லாமல் பேசாமல் இருந்தேன். அவர்களோடும் பேசியாகிவிட்டது,மற்றபடி வகுப்பில் யாரோடும் எந்தவித  சங்கடமும் இல்லை,ஆம்  கடந்த முறை ஒரு விளையாட்டுத்தணமான வலைப்பதிவினால் எனக்கும் கருப்பு அண்ணனுக்கும் சிறு மனஸ்தாபம் ஏற்பட்டுவிட்டது ,ஒரு வழியாக பாஷா பாய்.டைட்டசோடு சேர்ந்து என்னை குண்டு கட்டாக தூக்கிச் சென்று அண்ணனை கட்டிஅணைக்க வைத்துவிட்டார்கள். மீண்டும் சேர்ந்துவிட்டோம்,
     பள்ளியைவிட்டு வரும்போது கூட கண் கலங்கவில்லை,ஆனால் இங்கே கண் கலங்கிற்று,இனம்பிரியாத ஸோகம் எல்லோருக்குள்ளும், கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது, மாறிமாறி கட்டி அணைத்துக்கொண்டோம்,வெறி பிடித்ததுபோல் ஆடிக்கொண்டிருந்தோம், சும்மாகிடந்த சேரை எவனோ எத்த அது முருகேசனது காலை பதம்பார்த்ததும் அந்த மனிதன் வலியால் துடித்துக்கொண்டிருக்க ,நாங்களோ எங்களை பிரிவதை எண்ணி தான் வருந்துகிறாரோ என ஆறுதல் தெரிவித்ததும் ,பிறகு தான் உண்மை புரிந்து டேபிளில் தூக்கிப்போட்டு பர்ஸ்ட் எய்டு செய்ததும்,. ஆகச்சிறந்த காமெடி. என்னோடு படித்து கொண்டிருக்கும் சக தோழிகளுக்கும் ,ஜீனியர் சகாக்களுக்கும்  நன்றி  தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிகழ்வில்  அடியேன்  எண்ணி வருந்தியது என் உயிரை வாங்கும் உயிர்த் தோழி ஹேமா அருகில் இல்லாததை எண்ணி தான் அவள் நிகழ்ச்சிக்கு வரவில்லை ,தந்தையை பார்க்கப் போகிறேன் என ஊருக்கு கிளம்பிவிட்டாள். மற்றுமொரு முக்கியமான விஷயம் வெங்கட்டின் கவிதை,கைத்தட்டலில் துவங்கி ஐயோ  போதும்டாசாமி ஆளை விடு என கதற வைத்துவிட்டான்...........................................................
மிஸ் யூ ஆல்.....
தாங்க் யூ ஜூனியர்ஸ் .........
    
           

Comments

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!