ஒன் டைம் ஒன்லி...!!!
நம்ம வெற்றிக்கொடி கட்டு படத்துல வடிவேலு,” அங்க துபாய்லலாம் ஒரு தடவ யூஸ் பண்ணுன டீ டம்ளர , இன்னொரு தடவ யூஸ் பண்ண மாட்டாங்க ...” அப்படின்னு ஒரு பேச்சுக்கு சொல்வாப்புல. இங்க அதே மாதிரி நிஜத்துல ஒரு சம்பவம். எல்லாம் இந்த ராஜஸ்தான் காரணுங்க பன்ற அட்டகாசம் தான்.! சாயங்காலம் டீ சாப்புட போனேன். எல்லாம் மண்ணுல செஞ்ச டம்ளரா இருந்துச்சி. அதுல தான் டீ கொடுத்தான். பூராப் பயலும் குடிச்சுப்புட்டு , புள்ளையாருக்கு தேங்காய் உடைக்கிற மாதிரி பொசுக்கு பொசுக்குனு போட்டு உடைக்கிறாய்ங்க.,,! என்னடா இது கூத்தா இருக்கே? ஒரு வேள இங்க டீ கப்புக்கும் சேர்த்து காசு வாங்கிடுவானுங்க போலனு நெனச்சிக்கிட்டு, டீ எவ்வளவுனு கேட்டேன், அவன் ஹிந்தில ஆறு ரூபாய்னு சொன்னான். அடப்பாவி எப்படிடா கட்டுபடி ஆகுதுனு கேட்டேன். டீ பாஞ்ச் ரூவா, கப் ஏக் ரூவா ஜி..! அப்படினு ஒரு பதிலு.தூக்கி வாரிப் போட்டுடுச்சி..! நம்ம ஊர்ல பிளாஸ்டிக் கப்பே இரண்டு ரூபாய், இவனுங்க மண்ணுல சுட்டு செஞ்ச டம்ளர் ஒரு ரூபாய்ன்றானுங்க. மொதல்ல இந்த டம்ளர் விலை நம்ம ஊர்ல எவ்வளவுனு விசாரிக்கனும்.?
பி.கு: உங்களுக்காக டம்ளரின் போட்டோ இணைத்துள்ளேன். நம்ம ஊர்ல இதோட விலை எவ்வளவுனு தெரிஞ்சா சொல்லுங்க..! விலை கூட இருந்தா இங்க இருந்து எக்ஸ்போர்ட் பண்ணிடலாம்..!
Comments
Post a Comment