மஸ்டர்ட் ஆயில்..! ( mustard oil )


வட இந்தியா வந்ததில் இருந்து மொழி புரியாததால் இவர்கள் செய்யும் அனைத்தும் புதுசாகவும், வேடிக்கையாகவும் தெரிவதில் வியப்பேதுமில்லை.!! ஆனால், இவர்கள் இன்னும் முழுதும் உலகமாயமாக்கலின்  பிடியில் சிக்கிக்கொள்ளவில்லை என்பது , அவர்களது இன்னும் மாறாத உணவு முறையில் தெரிகிறது. படித்துவிட்டோம்  என்பதற்க்காக பீட்சா, பர்கருக்கு மாறியிருக்கும் பால்டாயில் பஞ்சாயத்துகளைப் பற்றி நான் இங்கு குறிப்பிடவில்லை. மாறாக எழுதப் படிக்க தெரியாத, அல்லது அறைகுறை படித்தவர்கள் முற்றிலும் பாரம்பரிய உணவுகளையே விரும்புகிறார்கள்.இது தமிழகத்திலும் நிகழ்கிற ஒன்று தான், ஆனால் இங்கு எண்ணிக்கை சற்று அதிகம்.

இக்கட்டுரை மஸ்டர்ட் ஆயில் பற்றியது தான். அது என்னப்பா புது ஆயிலா இருக்கு என நீங்கள் வினவலாம். ஏற்கனவே மார்க்கட்டில் இருக்கும் ரீபைன்ட், பியூரிபைடு, பாமாயில், குருடாயில், நல்லெண்ணெய், கடலை எண்ணெய்களுக்கு இடையே இது எந்த கார்ப்பொரேட் பாத்த வேலைடா என முதலில் அந்த பாட்டிலை பார்த்ததும் தோன்றியது. ரொம்ப நேரம் எல்லாம் எடுத்துக்கொள்ளவில்லை. “கியா ஆயில் ஜி?” என உடன் பணிபுரிபவனிடம் வினவினேன். அவன் ஏதோ கடகட வென ஹிந்தியில் பதிலளித்தான். தேவைதான் எனக்கு. ஒழுங்கா மூடிக்கிட்டு இங்கிலீஷில் கேட்டிருக்கலாம். மறுபடியும் “ வாட் ஆயில் ஜி?” என கேட்டேன். அவனுக்கு அதை ஹிந்தியில் சொல்லத்தெரிந்ததே தவிர,, அங்கிலத்தில் சொல்லத்தெரியவில்லை. ஆனால் அவன் கூறியதில் சப்ஜி இதில் செய்தால் நன்றாக இருக்கும் என்பது மட்டுமே புரிந்தது.

சரி விட்டுத் தொலைவோம் எனவும் விட முடியவில்லை. கூகுளாண்டவரிடம் விடை தேடினேன். செருப்பால் அடித்த்து போல் இருந்தது வந்த பதில். மஸ்டர்ட் ஆயில் என்பது கடுகாயிலாம்(கடுகு எண்ணெய்). அடப்பாவிகளா , அதுலாம் என் ஊர் பக்கம் எண்பது, தொன்னூறுகளிலே அழிஞ்சுப் போச்சேடா!!. இப்பலாம் என் ஸ்டேட்ல ஒன்லி ரீபைன்ட் தான்யா ஹைஜீனிக் எனக் கூறினேன். அதற்கு அவன் சிரிப்பை மட்டுமே பதிலாகத் தந்தான். நானும் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன். சிறு வயதில் காலில் அடிபட்டு தடுமாறிய போது பக்கத்து வீட்டு பாண்டியன் அண்ணா கடுகு எண்ணெய்யை தடவ சொல்லிக்கொடுத்தது ஞாபகம் வந்தது. அதன் பிறகு அந்த மஸ்டர்ட் ஆயில் என் வாழ்வில் குறுக்கிடவேயில்லை.!! நான் ரீபைன்ட் குப்பையில் மூழ்கி நாசமாகிப் போனவன். இதன் பிறகாவது மீள்வேனோ???

Comments

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!