Posts

Showing posts from 2017

மழைக்குள்ளிருந்துப் பார்ப்பது போல்...!

Image
 மழையில் நனைந்திருப்போம், ஆனால் கொட்டும் மழைக்குள்ளிருந்து உலகத்தைப் பார்த்திருக்கிறோமா? சட சட வென விழும் மழைத்துளிகளைத்தவிர வெறெதும் புரியாமல், மங்கிய அந்தப் பார்வைகளில் சேகாரமாகும் பிம்பங்களை என்றாவது அசை போட்டதுண்டா..!அவை ஒருபோதும் துல்லியமாய் பதிவாவதில்லை. மழையில் நனைவதை மகிழ்ச்சியின் பிறவாகம், உற்சாகக் கீற்று என நம்பும் நாம்,மழைக்குள்ளிருந்து என்றாவது இந்த உலகத்தைப் பார்த்திருப்போமா? அதை மகிழ்ச்சியினூடே பொருத்தியிருப்போமா? மங்கியவை எல்லாம் சோகத்தின் வெளிப்பாடாகவே இங்கு உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது.எந்தஒரு நிகழ்வும் இங்கு நேர் எதிர் விவாதத்தைக் கொண்டிருக்கும்.ஆனால் மழைக்குள்ளாகப் பார்த்தல் மட்டும் ஒருவித கலங்கிய மனதைப் பிரதிபலிப்பதாவே தோன்றுகிறது. அது சரியெனவும் மனமானது நம்பித்தொலைக்கிறது. உதாரணத்துக்கு, கணவனையும், மகனையும் இழந்தப் பெண்ணொருத்தி அவர்கள் இறந்த நிகழ்வை நினைக்கும் பொழுதெல்லாம், அவளின் பார்வை மழைக்குள்ளிருந்துப் பார்ப்பது போல் இருப்பதாக தெரிவிக்கின்றாள். இழந்தவர்களை நினைத்து கண்கலங்குவதைத் தான் , இறந்தவர்களை நினைக்கும் பொழுதெல்லாம் மழைக்குள்ளாக இருந்து பார்ப்ப...

அறுபதிலும் வைராக்கியம்..!

சிலப் பிறவிகளைப் பார்த்தாலே பதறி அடித்து ஓட்டமெடுக்க வேண்டியுள்ளது. காரணம் வேறென்ன பணப் பைத்தியங்கள். அவர்கள் எது செய்தாலும் அதன் முடிவில் பணமே பிரதான நோக்கமாகய...

நாய் பிறர் எச்சிற்க்கு இமையாது பார்த்திருக்கும்..!

நாலடியார் – திருக்குறள் நன்னெறிக்கதைகள் படித்துக்கொண்டிருக்கிறேன்..! நாலடியில் கிழவியும், ஏறக்குறைய இரண்டடியில் கிழவனும் வார்த்தையில் விளையாடியிருக்கிறார்க...

வார்த்தைகளுக்கு ‘பொருளாழமும்’ உண்டு..!

அந்த பொருளாழம்(கார்ப்பொரேட்டுகளிடம் பொறுக்கிய பணம்) தான் சிலரை சல்லிக்கட்டிற்கு எதிராக பேசச் சொல்லுகிறது. அந்த பொருளாழம்(சின்னம்மாவிடம் பிச்சை வாங்கிய பணம்) தான் சிலரை சசிகலாவிற்கு ஆதரவாக பேசச் சொல்லுகிறது. அந்தப் பொருளாழம் தான் தமிழை ரசிக்க வைக்கிறது..!

மாலையில் ஒரு டவுட்...!

 “ சின்ன சின்ன மழை துளிகள் சேர்த்து வைப்பேனோ மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து வைப்பேனோ …!?” என் சுவாசக்காற்றில் வரும் இந்தப் பாடலைப் பல முறைக் கேட்டிருக்கிறேன். ஆனால் இதுவரை இந்த சந்தேகம் வந்ததில்லை , இந்த வார்த்தையையும் சரிவர கவனிக்கவில்லை.அந்த வார்த்தை வரும் வரி இது தான்.... “ சக்கரவாகமோ மழையை அருந்துமாம் நான் சக்கரவாக பறவை ஆவேனோ... ?” ` சக்கரவாகம் ` .இது தான் , இந்த வார்த்தை தான். ` சக்கரவாகம் ` . சக்கரவாகனம் கேள்விப்பட்டிருக்கிறேன். இது என்னய்யா புது வார்த்தையா இருக்கு.வழக்கம் போல “ஜெய் கூகுளாண்டவா” என வணங்கி தேடலைத் தொடங்கினேன்.வழக்கம் போல நமது கற்பனைக் கவிஞர்கள் சுட்ட வடை தான் அது. சக்கரவாகப்பறவை அல்லது சாதகப்பறவை என்றொருப் பறவையை கற்பனையாய்ப் படைத்துள்ளார்கள். அதாவது மண்ணில் விழுந்துவிட்ட ஒரு சொட்டு தண்ணீரைக்கூட சக்கரவாகம் அருந்தாதாம். பூமி தொடாத பரிசுத்த பானி(நீர்)யைத்தான் பறவைவாள் அருந்துவாராம். அப்படி ஒரு பறவை நிஜத்தில் இல்லை. எல்லாம் நம் கற்பனைக்கவிஞர்கள் எழுதி வைத்த உடான்ஸ் தான். ஆனால் , அதில் ஓர் ஆன்மிக உள்ளர்த்தமும் கற்பிக்க முடிகிறது. அதாவது இறைவனை...