நாய் பிறர் எச்சிற்க்கு இமையாது பார்த்திருக்கும்..!
நாலடியார் – திருக்குறள் நன்னெறிக்கதைகள் படித்துக்கொண்டிருக்கிறேன்..! நாலடியில் கிழவியும், ஏறக்குறைய இரண்டடியில் கிழவனும் வார்த்தையில் விளையாடியிருக்கிறார்கள். அர்த்தம் புரியவே அம்பானி மனதை ஆண்டி வேடம் போட வைக்க வேண்டியதாக உள்ளது. லுங்கி டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த மனதை , தியான நிலைக்கு இழுத்து வரவே தாவு தீர்ந்த்துவிடுகிறது. வார்த்தை வார்த்தையாய் அணுக வேண்டியுள்ளது.பொருள் சுவை ஒரு போதையாய் இறங்கி , வடியாமல் பார்த்துக்கொள்ள கர்நாடகா கணக்காய் மனதில் பல அணைக்கட்டுகள் கட்ட வேண்டியுள்ளது.
கம் டூ த கருத்து. பெரிய தலைவன் (பிக் பாஸ்) பார்த்துக்கொண்டிருந்தேன்.அதில் உள்ள அத்துணை பேருக்கும் ஒரு நாலடியார் பாடல் ஒத்துப்போவதாய் தோன்றிற்று. குறிப்பாய் ஜூலிக்கும்,காயத்திரிக்கும்.
பாடல், நாலடியாரின் 345 வது செய்யுள்.
“பொற்கலத் தூட்டிப் புறந்தரினும் நாய்பிறர்
எச்சிற்கு இமையாது பார்த்திருக்கும்- அச்சீர்
பெருமை யுடைத்தாக் கொளினும் கீழ் செய்யும்
கருமங்கள் வேறு படும்.” - ஔவை
பொருள் மிக எளிமையாக சொல்ல வேண்டுமானால் , தங்கத் தட்டுல சோத்தப் போட்டு வச்சாலும், நாய் மத்தவங்க எச்சி சோத்தையே கண்ணெடுக்காமல் பார்த்துகினு இருக்கும். சில்லறைய நீ பெருமை படுத்துனாலும் , அதோட சில்லற புத்திய என்றைக்கும் மாத்த முடியாதுடா என் டொமட்டோ என கிழவி பொட்டுல அடிச்ச மாறி சொல்லிருக்கா.
மொத ரெண்டு வரி ஜூலிக்கு, பெரிய தலைவன்- ல கிடைத்த வாய்ப்ப சரியா யூஸ் பண்ணிக்கத் தெரியாம, காயத்ரி காலில் விழுந்து கிடக்குறது, நாய் தங்கத்தட்டுல சோத்தப் போட்டாலும் , அடுத்தவன் எச்சிக்கு இமையாமல் பார்த்துக்கிட்டு இருக்குறதுக்கு கரக்டா ஒத்துப் போகும்.
அடுத்த ரெண்டு வரி அக்ரஹாரத்து சொர்னாக்கா காயத்திரி மாமிக்கு.என்னதான் பெரிய தலைவன் டீமும், ஆண்டவரும், அக்காவோட பேர காப்பாத்த முயற்சி பண்ணினாலும், அக்கா நான் ஒரு சில்லற என்பதை அடிக்கடி நிரூபிக்கிறார்.
ஒரே வரியில சொல்லனும்-னா, “சில்லற புத்தி, திருத்தினாலும், திருந்தாது..!”
பாடல் மட்டுமே நான் அறிவேன்!பிக்பாசு பார்ப்பதில்லை!
ReplyDeleteபிக்பாஸ்/நாலடியார்... ஆகா
ReplyDelete