மழைக்குள்ளிருந்துப் பார்ப்பது போல்...!
மழையில் நனைந்திருப்போம், ஆனால் கொட்டும் மழைக்குள்ளிருந்து உலகத்தைப் பார்த்திருக்கிறோமா? சட சட வென விழும் மழைத்துளிகளைத்தவிர வெறெதும் புரியாமல், மங்கிய அந்தப் பார்வைகளில் சேகாரமாகும் பிம்பங்களை என்றாவது அசை போட்டதுண்டா..!அவை ஒருபோதும் துல்லியமாய் பதிவாவதில்லை. மழையில் நனைவதை மகிழ்ச்சியின் பிறவாகம், உற்சாகக் கீற்று என நம்பும் நாம்,மழைக்குள்ளிருந்து என்றாவது இந்த உலகத்தைப் பார்த்திருப்போமா? அதை மகிழ்ச்சியினூடே பொருத்தியிருப்போமா? மங்கியவை எல்லாம் சோகத்தின் வெளிப்பாடாகவே இங்கு உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது.எந்தஒரு நிகழ்வும் இங்கு நேர் எதிர் விவாதத்தைக் கொண்டிருக்கும்.ஆனால் மழைக்குள்ளாகப் பார்த்தல் மட்டும் ஒருவித கலங்கிய மனதைப் பிரதிபலிப்பதாவே தோன்றுகிறது. அது சரியெனவும் மனமானது நம்பித்தொலைக்கிறது.
உதாரணத்துக்கு, கணவனையும், மகனையும் இழந்தப் பெண்ணொருத்தி அவர்கள் இறந்த நிகழ்வை நினைக்கும் பொழுதெல்லாம், அவளின் பார்வை மழைக்குள்ளிருந்துப் பார்ப்பது போல் இருப்பதாக தெரிவிக்கின்றாள். இழந்தவர்களை நினைத்து கண்கலங்குவதைத் தான் , இறந்தவர்களை நினைக்கும் பொழுதெல்லாம் மழைக்குள்ளாக இருந்து பார்ப்பது போல் மங்கலாக அனைத்தும் தெரிவதாய் சொல்கிறாள். மொத்த நிகழ்வையும் மழை மீது ஏற்றி, அதன் விளைவாய் மழையினூடே பார்க்கும் மங்கிய பிம்பங்கள் துல்லியமாய்த் தெரியாத உலக உண்மையை, தன் மங்கிய வாழ்க்கையை அவளைத்தவிர வேறு யாரும்மழைக்குள்ளிருந்துப் பார்த்திருக்க முடியாது.

Comments
Post a Comment