இந்த பாரிலே பிறந்ததும் எழுந்து நடக்கத் தெரியாத ஒரே விலங்கினம் “ மனுசன்” தான். பிறந்தது முதல் இறப்பது வரை யாருடைய தோளிலாவது சவாரி செய்தே வாழப் பணிக்கப்பட்டவன். விலங்கினங்கலிலிருந்து சிந்திப்பது ஒன்றைத் தவிர மற்ற எந்த வலிமையையும்ப் பெறாதவன். பலகீனங்களின் ஒட்டு மொத்த வடிவமாய் நடமாடிக்கொண்டிருக்கிறான். அவனுக்கு, தனியே நடப்பது பயம், தனியே வசிப்பது பயம், பிடித்ததைப் பேச பயம், பிடித்தன செய்ய பயம், சுற்றத்தைக் கண்டு பயம், சூழ்நிலை கண்டு பயம், அரசைக் கண்டு பயம், அன்பைக் கண்டு பயம், தோழமை கொள்ள பயம், தோல்வி கண்டு பயம், கரம் பற்ற பயம், கல்வி கற்க பயம், ஆசைகள் கொள்ள பயம், அடைவன நினைத்து பயம், சொற்கள் பயம், கேட்டல் பயம், உறவுகள் பயம், உண்பதில் பயம், கண் பார்த்தல் பயம், கட்டியணைத்தல் பயம், காதலும் பயம், முத்தமும் பயம் என மொத்தமும் பயமாய் சூழ்ந்திருக்க வாழ்கிறான் மகிழ்ச்சியாய், எப்படி?.மறைத்தல் மனுசனுக்கு பிறவி வரமாம். யாரும் அறியா வண்ணம், பயம் எனும் அவ்வேதாளத்தைத் தோளில் சுமந்தவாரே சக உயிரின் ஏதோ ஒரு சொல்லில், செயலில், அன்பில் தன் பயம் தனைப் புதைத்து வீராதி வீரனாய் ராஜ நடைப் போட்டுக்கொண்டிருக்க...