எல்லாம் மனுசங்க தான்...!!
பொறியியல் படித்த அனைவருக்கும் குறிப்பாக C ore Department ஆசாமிகளுக்கு சொந்த நாட்டிலே கைநிறைய சம்பாரிப்பது எட்டாக்கனி , ஐந்தாயிரத்தில் தொடங்கி.... ஐந்பதாயிரத்தை எட்டுவதற்குள் ஆயுள் முடிந்துவிடும். வேறு வழி தெரியாமல் பணத்தின் பொருட்டு வேலைக்காக அண்டை நாடு நோக்கி பயணப்படுபவர்களே ஏராளம்.அடியேனும் அவர்களில் ஒருவன்..!! ஓமான் செல்லத் தாயாரான பொழுது உள்ளம் எல்லாம் நிறைந்து கிடந்தது அச்சம் தான். காரணம் அது ஒரு இஸ்லாமிய நாடு. சிறு வயது முதலே நமது தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்கள் கொடுத்த அளவற்ற பயம். இஸ்லாமியா நாடுகள் என்றாலே ஒரு வித அச்சம். நாம உண்டு நம்ம வேலையுண்டுன்னு இருந்தா ஒரு பிரச்சனையும் வராதுன்னு எனக்கு நானே ஒரு தைரியாத்தை வர வச்சிக்கிட்டு தான் ஓமான் வந்தேன். ♣ வந்து இறங்கிய உடனே என்னை அழைச்சிட்டுப்போக வந்தது ஒரு ஓமானி. என் நிறுவன PRO. He: Hello, Sharavanakumar, how are you?? Me: yeah, fine sir… உடம்பு முழுக்க நடுக்கம் வியர்க்க ஆரம்பிச்சுடுச்சு . பதிலுக்கு நல்ல இருக்கீங்களான்ன்னு கூட கேட்கலை. வில்லா (Villa) வந்து சேரும் வரை எதும் பேசலை. ஒரு வழியா வந்து இறங்கி தோ...