கொளுத்துங்கள் கப்பலை...!!

அவனுக்கு ஒரே ஆசை தான். எப்பாடு பட்டாவது,வெற்றிப் புதையலை அடைந்து விடவேண்டும். அதற்காக உயிரையும் துச்சமென இழக்கத் துணிந்தவன். சளைக்காமல் போராடும் வலிமை பெற்றவன். இரத்த நாளம் ஒவ்வொன்றிலும் போராட்ட குணம் ஊறிப்போனவன்.
அவன் ஒரு தளபதி. தளபதி மட்டும் எண்ணினால் போதுமா? ஒட்டு மொத்தப் படையும் அல்லவா எண்ண வேண்டும். அதற்காக அவன் எடுத்த ஒரு முயற்சி வரலாறாகிப் போன கதை தான் இது.
ஒரு நகரைக் கைப்பற்ற , 500 படை வீரர்களோடு நாவாயில்  கிளம்பினான். வெல்வது ஒன்றே குறி. எக்காரணம் முன்னிட்டும் பின்வாங்குதல் கூடாது.தான் நினைத்தால் மட்டும் போதுமா? ஒட்டு மொத்தப் படையும் அல்லவா நினைக்க வேண்டும். ஒரு திட்டம் வகுத்தான்.கைப்பற்ற வேண்டிய நகரின் கடற்கரையை அடைந்ததும் வீரர்களுக்கு
ஒரு கட்டளை இட்டான். 'நாம் வந்த கப்பல் அனைத்தையும் கொளுத்துங்கள்'(BURN THE SHIP) என்பதே அது. இதைக்கேட்ட வீரர்கள் அனைவரும் ஆடிப்போனார்கள்.  வந்த கப்பலைக்
கொளுத்திவிட்டு திரும்பிசெல்வது எவ்வாறு?  இருப்பினும் உத்தரவை மீறிட முடியாதே! செயல்படுத்தினார்கள். நாவாய்கள் அனைத்தும் நாசமாய்ப்போனது.
வீரர்கள் முன்னால் வந்து பேசினான். ,' வீரர்களே நாம் வந்த கப்பல் அனைத்தையும் கொளுத்தியாயிற்று. வந்த வழி செல்ல இயலாது. முன்னேறிச்செல்வது ஒன்றே இலக்கு. அதுவே நமக்கு இருக்கும் வழியும் கூட. வெற்றியடைவோம் அல்லது செத்துமடிவோம். பின் வாங்குதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. செய் அல்லது செத்துமடி
என்பதே நம் தாரக மந்திரம். வென்றால் நாடு அல்லது காடு.வாருங்கள் புறப்படுவோம்' என்று முடித்தான். சூழலை உண்ர்ந்த வீரர்கள் வேறு வழியின்றி  அடித்து நொறுக்கினார்கள். வெற்றிக்கனியைப் பறித்தார்கள்.
*அந்தத்தளபதி - Hernan Cortex.
*படைவீரர்கள் - 500 பேரும் ஸ்பான்யர்கள்.
*கைப்பற்றிய நகரம் - மெக்சிகோ(1519- ம் ஆண்டு)
அந்த 'Burn The Ship' என்ற தாரக மந்திரம் இன்றளவும், சுயமுன்னேற்றப் பேச்சாளர்கள் பலராலும், வணிகநிறூவனங்கள் பலவற்றாலும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டு தான்
உள்ளது.சுறுங்கச் சொன்னால்; 'முன் வைத்தக் காலைப் பின்  வைக்காதே' என்று நாம் கால காலமாக சொல்லி வருகிறோமே அதே தான் இது. என்ன சுய முன்னேற்றத்துக்குக்கூட அந்நிய
நாட்டு வரலாறு தான் சபையேறுகிறது. முதலில் இந்த அந்நிய நாட்டுமோகம் எனும் கப்பலை நம் உள்ளத்தில் இருந்து கொளுத்துவோம்.  நன்றி வணக்கம்.

Comments

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!