யப்பா நான் டிகிரி வாங்கிட்டேன்...!!



  தொன்னூறூகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தையின் நெற்றியிலும் நீ இன்ஜினியர் ஆகி துன்பப்படுவாய் என கடவுள் எழுதித் தொலைத்திருப்பார் போலும். அடியேனும் அந்த வகையில் அடங்கியவன் தான். எல்லா பெத்தவங்களைப் போலவும் இன்ஜினியர் ஆனால் லட்சம் லட்சம் ஆக சம்பாரிக்கலாம் , கஷ்டம் என்பதே இல்லாமல் செட்டில் ஆகிவிடலாம் , தேன் காற்று வாழ்க்கை முழுதும் வீசும் என்ற குருட்டுத் தனமான புலம்பல்களை கேட்டு வளர்ந்து, இதோ  இப்பொழுது டிகிரியையும் வாங்கி வாழ்நாள் சாதனை ஒன்றை நிறைவேற்றியிருக்கிறேன்.
 இந்த டிகிரிக்காக எல்லை இல்லா துன்பத்தை அனுபவித்தேன் என்றாலும் , நன்றாக டியூன் ஆகி இருக்கிறேன்.கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்க ரெடியாக இருக்கிறேன் என்று என்னால் லிங்குசாமி போல எல்லாம் சொல்லி பல்ப் வாங்க முடியாது. இன்ஜினியரிங் புல் மீல்ஸ் என்றால் நான் கடைசி ரவுண்டு தயிர் அளவு மட்டுமே கற்று வந்திருக்கிறேன். இதற்கே லுங்கி டான்ஸ் எல்லாம் ஆட வேண்டியதாகிவிட்டது. ஒரு வழியாக டிகிரி வாங்கிவிட்டோம் என்றெல்லாம் என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. வாங்கிய டிகிரிக்கு ஏற்ற வேலை அமையவில்லை. கிடைக்கும் வேலைகள் அனைத்தையும் என் இன்ஜினியர் மனம் ஏற்க மறுக்கிறது.
 எதிர்பார்த்த எதுவும் அமையாது போனால், அமைவதை தான் ஏற்றுக்கொள்ள வெண்டும் போலிருக்கிறது. கிடைக்கும் மென்பொருள் நிறுவன வேலைகளை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாமல்  கோர் கம்பெனி வேலை ஒன்றில் தினக்கூலியை விட மிகக் குறைந்த கூலிக்கு இன்ஜினியர் என்ற பொசிசனில்  சேர்ந்திருக்கிறேன். ஆடிப் போய் ஆவனி வந்தால் டாப்பாக வருவேன் என்ற நம்பிக்கையில் எல்லா இன்ஜினியர்களைப் போலவும் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறேன்.

Comments

Post a Comment

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!