சர் நாம் கியா ஹை..!!(what is your surname?)


வட இந்தியா வந்த புதிதில் நான் எதிர் கொண்ட முதல் கேள்வி , “ஆப்கா சர் நாம் கியா ஹை?” ... நான் கூட இனிசியல் தான் கேட்கிறார்கள் என நினைத்து ‘ஜி’(g) எனக் கூறினேன்.... “நஹி பாய், இனிசியல் நஹி.. சர் நாம் கியா??“
“டேய் எனக்கு சர் நாம்லாம் இல்லை , விட்டுடா?” என ஆங்கிலத்தில் விளித்தேன். நஹி பாய்.. ‘மேரா சர் நாம் ஜா(jha), இஸ்கா சர் நாம்  சிங்(singh)... ஆப்கா சர் நாம்..?’ என கேள்வி எழுப்பவே , ‘டேய் சாதிப் பெயராடா கேக்குறீங்க..! எங்க ஊர்லலாம் சாதிப் பெயரை பெயரோட சேத்துக்க மாட்டோம்...’ எனக் கூறினேன். ‘அப்புறம் எப்படி காஸ்ட் கண்டு புடிப்பீங்க.. ?’, என அவன் கேட்கவே.. சிரித்துக்கொண்டே ‘பெயருக்கு பின்னாடிலாம் காஸ்ட் போட்டுக்க மாட்டோம், ஊர் பேர சொன்னாலே இந்த சாதிக் காரன் தான்னு ஈசியா கண்டு பிடிச்சுடுவோம்னு சொன்னேன்’ அவன் பதிலுக்கு ‘அச்சா அச்சா-னு’ சிரிச்சிக்கிட்டே  சொல்லிட்டு போய்ட்டான்.

என்னத்த நினைச்சி சிரிச்சிருப்பான்..!???
*****

Comments

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!