Posts

Showing posts from May, 2020

நடுநிலை இடியட்ஸ்...!

  தற்கொலையை , கெளரவக்கொலையை , முன் விரோதக் கொலையை கண்டித்தும் , மனித நேயத்தை வலியுறூத்தியும் மணிக்கணக்காக பேசும் நீதி வழுவாதவர்கள் இந்த நடுநிலையாளர்கள் . அவர்களுக்கு   பாராட்டுக்கள் .  வாழ்த்துக்கள் .  கூடவே , விலங்குகளையும் , பூச்சிகளையும் காக்கும் ஜீவக்காருண்யக்காரர்களாக இருப்பது குறித்தும் பெருமிதம் கொள்கிறேன் .  பைக்கை நிப்பாட்டும் போது கூட நடு ஸ்டாண்டையே பயன்படுத்தும் உத்தமர்கள் . கைத்தட்டவும் , விளக்கேற்றவும் சொல்லி காலத்தை கொல்கிறவர்கள் பற்றியோ , தவறான நிதிக்கொள்கைகளால் நாட்டின்   செல்வத்தைக் கொல்கிறவர்கள் பற்றியோ , நாட்டின் பொருளாரதாரத்தை கொத்து பரோட்டா போட்டு தனியார் சுவைக்க கொடுப்பவர்கள்   குறித்தோ பேசும் போது மட்டும் , நடு ஸ்டாண்டுக்கு பதிலாக சைடு   ஸ்டாண்ட் எடுப்பது ஏனோ ? Cause and effect என்று ஒரு கோட்பாடு உண்டு .   காரணமும் அதன் விளைவுகளும் . கொலை கொள்ளை எல்லாம் வெளிப்பாடுகள் . விளைவுகள் .   Effects of causes.   இவற்றிற்கெல்லாம்   உண்மையான காரண...

ஏழு கழுதை வயசாச்சி..!!

Image
அது என்ன ஏழு கழுதை வயசு ? கழுதையின் வாழ் நாட்களா ?   ஒரு கழுதை 40 ஆண்டுகள்  சராசரியாக வாழ்கிறது என்று வைத்துக் கணக்கிட்டாலும் ஏழு கழுதை வயது 280 அண்டுகள். நம்மோடு யாரும்  280  அகவைக்காரர் வாழ்கிறாரா ? இல்லையே.. அப்படி என்றால் இதன் பொருள் தான் என்ன ? நாம் தான் பார்ப்பதற்க்கும் கேட்பதற்கும் மெய்ப்பொருள் காண்பதே இல்லையே. கலப்போக்கில் நாம் பொருள் மாற்றிவிட்ட சொலவடைகள் , பழமொழிகள் , வரலாறுகள்  ஏராளம். இதுவும் அதில் ஒன்று தான். இதன் விளக்கத்திற்கு நாம் சற்று புறப்பொருள் வெண்பாமாலை வரை சென்று வர வேண்டும். அரசன் தன் வீரத்தால் போரில் வென்றிட வேண்டும் என வாழ்த்துதல் மரபு. அரசனின் வீரத்தை புறப்பொருள் வெண்பாமாலையில்   பொதுத்திணையில் உன்ன நிலை , ஏழக நிலை , கழல் நிலை என்னும் மூன்று   துறைகளில் விரிவாக கூறியிருக்கிறார்கள். மற்றதை விட்டுவிட்டு ஏழக நிலையை மட்டும் எடுத்துக்கொள்வோம். ஏழகம் – ஆட்டுக்கிடா. ஏழக நிலை – ஆட்டுக்கிடாயினை கொண்ட நிலை. ஏழக நிலைக்கு இரண்டு விளக்கங்கள் உண்டு. முதல் விளக்கப்பாடல்: ஏழகம் ஊரினும் இன்னன் என்றவன் தாழ்வில் ஊக...

ரொட்டி ஒழிக..!!

Image
விவரம் தெரிந்த நாள் முதலாக இட்லியைக் காணும் பொழுதெல்லாம் வாய் தானாக ஒரு போராளியின் ஆக்ரோஷத்தோடு , சென் கூறும் நிதானத்தோடு   முணுமுணுப்பது “ இட்லி ஒழிக ..இட்லி ஒழிக...!” என்றே. அது என்னவோ தெரியவில்லை இட்லியின் வழித்தோன்றல் தோசையார் மீது பெருங்காதல் இருந்த பொழுதும் , மூத்தவர் இட்லியின் மீது பெரும் வெறுப்பு. ✤ குஷ்பூ இட்லி போமஸாக இருந்த காலத்தில் , குஷ்பூவையும் , இட்லியையும் மனதார வெறுத்தவன் அடியேன் ஒருவனாகத்தான் இருக்கும். குஷ்பூவின்   லேட்டஸ்ட் எடிசன் ஹன்சிகா மீது ஒரு தனி ஈர்ப்பு. ஆனால் , குஷ்பூ பிடிக்காது.   குஷ்பூவுக்கு கோவில் கட்டிய கதையையும் , இட்லிக்கு UNESCO அங்கீகாரம் கிடத்ததாக வந்த வாட்சாப் புரளியையும் சீரணிக்க முடியாமல் தவித்த நாட்கள் ஏராளம்.     ✤ காலத்தால் மாறாத கதை ஏதும் உலகில் உண்டா.   அவ்வாறே எனது “இட்லி ஒழிக” கோஷமும்   கதையும். வீட்டை விட்டு பிரிய ஆரம்பித்த நாட்களில் பிரிவின் துயரில் திருவாளர் இட்லியார்   எனது காலைகளை கவர்ந்து கொள்ள ஆரம்பித்துவிட்டார். ஒன்று , இரண்டாய் துவங்கி டசனுக்கு முன்னேறி குடலுக...