BECOME YOUR ……….!!!


பெரும்பான்மை மக்கள் எப்போதும் குறைப்பட்டுக் கொண்டே இருக்கும் காரியம் தான். மேலாளர், உடன் பணிபுவர், உடன்பிறப்பிடம், நண்பர்களிடம், சொந்தங்களிடம் ஏன் தாய் தந்தையாரிடமும் கூட குறைப்பட்டுக் கொண்டே இருப்பர்.  
“இந்த ஆளுக்கு வேற வேலையே இல்லையா? எப்ப பாரு ஏதாவது சொல்லிக்கிட்டே..! கொஞ்சம் கூட புரிஞ்சுக்கவே மாட்றாங்க”.  
இங்கு  தம்மை புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டே தவிர்த்து எதிராளியின் எண்ணப்பாட்டை புரிந்து கொண்டவர்கள் இல்லை. புரிந்து கொள்ள முயன்றவர்களும் இல்லை.
♥♥♥
அழகான ஜென் கதை ஒன்று உண்டு...!!
ஜென் குருவிடம் ஒருவர் ஜென் பற்றிய தனது ஐயத்தை வினவினார்.
“ஜென்னால் மனிதர்கள் ஞானம் பெறுகிறார்கள் என்பதை ஒத்துக்கொள்ளலாம்.ஆனால், மரம் செடி கொடிகள் கூட ஞானம் பெறும் என்பதை ஒத்துக்கொள்ள முடியாது” என்று அவர் கேட்க,
ஜென் குருவோ நிதானமாக,” மரம், செடி, கொடி க்கு எப்படி ஞானம் கிடைக்கும் என்பதை யோசிப்பதை விட்டு,  மரம் , செடி,கொடி யாக எப்படி மாறுவது என்று என்றாவது  யோசித்துள்ளீரா ?“என்று பதிலுக்குக்  கேட்க அமைதியாகிப்போனார் ஐயக்காரர்.
மரம் செடி கொடிக்கு ஞானம் கிடைத்ததா என்பதை அறிய நாம் மரம் செடி கொடியாக மாறிப் பார்க்க வேண்டுமே தவிர, மனிதராய் இருந்து கொண்டு கேள்வி எழுப்புவது அறமாகாது.
♥♥♥
“Thappad”  ஹிந்திப் படம் ஒரு வாரமக விவாதப்பொருளாக இணையத்தில் இருந்து வருகிறது. காதல் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தவர்கள், ஒரு அறையால் அலங்கோலமான கதை.  கணவன் இல்லாளை எதிர்பாராத ஒரு சூழ்நிலையில் அறைந்து விடுவான்.  அவளால் அதை தாங்கிக்கொள்ளவே முடியாது. சில நாட்கள் பார்ப்பால் , அவளால் அவனோடு பழைய படி இயல்பாய் இருக்கவே முடியாது. அந்த நிகழ்வுக்கு பிறகு அவள் வலிந்து சிரித்தாலும் அதில் ஆயிரம் வலிகள் அதுவாக வந்து செய்திகள் சொல்லும்.  சுற்றமும் நட்பும் ஒரே ஒரு அறை தான என எளிதாய்க் கடக்க. அவள் மட்டும்  நெருப்பில் இட்ட புழுவாய் துடித்தாள்.  சில நாட்களுக்குப் பிறகு எனக்கு சிறிது மாற்றம் வேண்டும், என் வீட்டுக்கு போகிறேன் என கணவனிடம் சொல்லுவாள். அவன் அப்பொழுதும் அவள் நிலையை புரிந்து கொள்ளவே இல்லை.
 அவள் தந்தை மட்டும் மகளை நினைத்து உருகிக்கொண்டே  இருப்பார். சில நாட்களில் அவள் விவாகரத்து கேட்பாள். எல்லோரும் ஆடிப்போவார்கள்.  ஒரு அறைக்கு விவாகரத்தா? இதெல்லாம் கொஞ்சம் ஓவர் என்பார்கள். கடைசி வரை அவளை கேள்விகேட்பார்களேத் தவிர, அவன் செய்தது தவறு என யாருமே சொல்ல மாட்டார்கள்.  Become that girl..! அவளாக மாறினால் தவிர அவளது நிலையை யாராலும் புரிந்துகொள்ள முடியாது.
♥♥♥
நாம் யாரை எல்லாம் கேள்வி கேட்கிறோமோ, அவர்களது இடத்தில் இருந்து பார்த்தால் நம் கேள்வி எவ்வளவு பெரிய அபத்தம் என்பது தன்னாலே புரியும்.
என் தந்தையிடம் ஒரு முறை வாக்கு வாதத்தில் ஏதோ ஒன்று கேட்க, நாளைக்கு நீயும் அப்பா ஆகுறப்ப புரியும் – னு சொன்னார்.  அவர் சாதாரணமா சொன்னதுக்கு உள்ள ஒரு ஜென் தத்துவமே இருக்கு.  அது ஜென் தத்துவம்ன்னு எல்லாம் அவருக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பேயில்லை. அவர் சொல்ல வந்தது என்னோட இடத்துல இருந்து பார் புரியும்கிறது தான்.
அடுத்த தடவை,
மேலாளரை திட்டுறதுக்கு முன்னாடி, become your boss…!
விட்டுப்போன காதலியை வசைபாடுறதுக்கு முன்னாடி, become your girl..!!
Become your everything…!!
நன்றி..!!
Who Said Watch Your Thoughts, They Become Your Words?

Comments

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!