நடுநிலை இடியட்ஸ்...!
தற்கொலையை, கெளரவக்கொலையை, முன் விரோதக் கொலையை கண்டித்தும், மனித நேயத்தை வலியுறூத்தியும் மணிக்கணக்காக பேசும் நீதி வழுவாதவர்கள் இந்த நடுநிலையாளர்கள். அவர்களுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். கூடவே,
விலங்குகளையும், பூச்சிகளையும் காக்கும் ஜீவக்காருண்யக்காரர்களாக இருப்பது குறித்தும் பெருமிதம் கொள்கிறேன். பைக்கை நிப்பாட்டும் போது கூட நடு ஸ்டாண்டையே பயன்படுத்தும் உத்தமர்கள்.
கைத்தட்டவும், விளக்கேற்றவும் சொல்லி காலத்தை கொல்கிறவர்கள் பற்றியோ,
தவறான நிதிக்கொள்கைகளால் நாட்டின் செல்வத்தைக் கொல்கிறவர்கள் பற்றியோ, நாட்டின் பொருளாரதாரத்தை கொத்து பரோட்டா போட்டு தனியார் சுவைக்க கொடுப்பவர்கள் குறித்தோ பேசும் போது மட்டும்,
நடு ஸ்டாண்டுக்கு பதிலாக சைடு ஸ்டாண்ட் எடுப்பது ஏனோ?
Cause and effect என்று ஒரு கோட்பாடு உண்டு. காரணமும் அதன் விளைவுகளும்.
கொலை கொள்ளை எல்லாம் வெளிப்பாடுகள். விளைவுகள். Effects of causes. இவற்றிற்கெல்லாம் உண்மையான காரணம் தான் என்ன?
நாட்டின் பொருளாதாரத்தை யானை புகுந்த கரும்புக்காடு போல நாசம் செய்தவர்கள் பல ஆயிரக்கணக்கானோர் வாழ்க்கையை மறைமுகமாக நாசம் செய்து,
மன உளைச்சலுக்கு உள்ளாக்கி,
வாழ்வின் மீது கொஞ்சம் நஞ்சம் இருந்த பிடிமானத்தையும் வெடுக்கென பிடுங்கி தற்கொலை செய்து கொள்ள காரணமாகிறார்கள். இது கொலைகளில் வராதா? சென்டர் ஸ்டாண்ட் நீதிமான்கள் இதற்கு ஊமையாகிவிடுவார்கள். கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் இருக்கும் ஆட்சியாளர்களால் தான் பொதுமக்கள் தங்கள் உரிமைகள் மீட்கும் பொருட்டு ஆயுதம் தூக்க தலைப்படுகிறார்கள். அதனால் விளையும் அசம்பாவிதங்களுக்கு யார் பொறுப்பு?
“கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்
டல்லவை செய்தொழுகும் வேந்து “ குறள் 551.
குடிகளை வருத்தும் முறையல்லாத செயல்களை செய்யும் அரசன் , கொலைத்தொழிலைசெய்பவரை விட கொடியவன்.
(The king who
gives himself up to oppression and acts un justify ( towards his subjects) is more cruel than the man who leads the life
of a murderer)
வள்ளுவர் இக்கொடியவர்கள் குறித்து முன்பே குறிப்பிட்டிருக்கிறார். ஆனால்,
நடு ஸ்டாண்ட் நண்பர்கள் மட்டும் இக்கொடியவர்கள் குறித்து குண்டுமணியளவு கூட குரல் கொடுக்கமாட்டார்கள்.
ஜி யின் ஆட்சியை எதை வைத்து பொற்காலம் என்கிறார்கள் என்று தான் விளங்கிக்கொள்ள முடியவில்லை. மனதின் குரல் என அடிக்கடி ஊடக வழி உளறல்கள்.தேவையில்லாத பேச்சுக்கள். ஒரு virus தாக்குதலை முழுமையாக கையாளத்தெரியவில்லை. இதையெல்லாம் பற்றி சென்டர் ஸ்டாண்டர்கள் கண்டுகொள்வதில்லை. அவர்களுக்கு இருக்கவே இருக்கிறார்கள் எளிய தம்பிகளும்,
கதை சொல்லும் அண்ணனும்.
நிதி தெரியாதவன் நிதித்துறையை ஆளும் போது நாட்டின் பொருளாதரத்தை நிலையில்லாத நிலைக்கு தான் கொண்டு செல்வான். நம்ம ஊறுகாய் மாமி அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. எதிர்க்க ஆளில்லாத நேரத்தில் பொதுத்துறையை பொங்கல் போட்டு விற்கும் பொருளாதார பெருந்தகை. இதற்கு முட்டு கொடுக்க கூட வழியில்லாமல் முட்டு சந்தில் நிற்கிறார்கள் நம்ம சென்டர் அண்ணாச்சிகள்.
ஒரு முட்டாளால் விளைகிற தீமைகளை விட, ஒரு புத்திசாலியால் விளைகிற தீமைகளை விட,தன்னை புத்திசாலி என்று எண்ணிக்கொள்ளும் முட்டாளால் விளையும் தீமைகள் அதிகம். அவனுக்கு தான் செய்வது தவறு என்ற சந்தேகம் கூட எழவே எழாது. போலவே இந்த நடு ஸ்டாண்ட் நல்லவர்களுக்கும் இது பொருந்தும்.
செய் ஹிந்த்..!!
பாரத் மித்ரோனுக்கு சே..!!
Comments
Post a Comment