சிடுசிடுப்பான்ஸ்...!!
ஊர்,ஜில்லா,மாநிலம்,நாடு ன்னு எது மாறுனாலும் மாறாதது இந்த சிடுசிடுப்பான்ஸ் தரிசனம். இஞ்சித்திண்ண குரங்கைக்கண்டது இல்லைன்ற மனக்குமுறலைப் போக்கவே பிறவி எடுத்து வந்துருக்கானுங்க.
"உன் புன்னகை என்ன விலை? கோடி என்றாலும் வாங்குவேன்னு.." பேபிஸ்க்கிட்ட உருட்டுற மாதிரி இவனுங்கக்கிட்ட உருட்டவே முடியாது. ஏன்னா? அப்படி ஒரு வஸ்து இருக்கிறதே இவனுங்களுக்குத் தெரியாது. மிஸ்கின் பட ஹீரோ மாதிரி உர்ன்னு தான் இருப்பானுங்க.
"நீங்க அழகா இருக்கீங்க?"
உர்...
"நீங்க ரொம்ப நல்லவர்.."
உர்..
"நீங்க எந்த ஊர்.."
உர்..
"நீங்க நிசமாவே மனுசன்தானா..."
உர்..
"சிரிச்சி சிரிச்சு வந்தா..." பாட்டைக் கேட்கும் போதும்
உர்...
உர் என்று இருந்தால் ஊர் மெச்சும்ன்னு பிறக்கும் போதே எவனோ இவனுங்க காதுல ஓதிட்டுப்போயிட்டானுங்க போல. சிரிச்சா சில்லறை எதுவும் செலவாகாதுன்னு யாராச்சும் இவனுங்களுக்குச் சொல்லிக்கொடுங்கப்பா.
பணமென்றால் பிணமும் வாயைப் பிளக்கும்ன்னு எவனோ பழமொழியைத் தப்பா எழுதிட்டான் போல. கல்லாப்பொட்டி பக்கத்துல இருக்கவனுங்க தான் பெரும்பாலும் சிடுசிடுப்பான்ஸா இருக்கானுங்க. வாழ்க்கையில பெரும்பாலான நேரம் பணத்தோடவே புரளுறவனுங்கக்கிட்ட சிரிப்பு இல்லாம இருக்கிறது ஆச்சரியம் தான். பேங்க் ஆபிசர்ஸ், பஸ் கண்டக்டர்ஸ், ஹோட்டல் கல்லாபொட்டியண்ஸ் இவங்க தான் பெரும்பான்மை சிடுசிடுப்பான் இனத்தைச் சேர்ந்தவங்க.
ஒரு மாசமா பக்கத்துல இருக்க பாகிஸ்தானி ஹோட்டல்ல சாப்பிட போயிட்டு இருக்கேன். பரோட்டாவும், டீயும் தான் பெரும்பாலான நேரம் ஆர்டர் பண்றது. காசும் கம்மி, வயிறும் நிறையும். சாப்பிட்டுட்டு காசு கொடுக்கப்போகும்போதெல்லாம் அந்தா கல்லாப்பொட்டி பச்சையன் சிரிச்சே நான் பாரத்ததில்லை. சிரிச்சா ரெகுலர் கஸ்டமர்ன்னு டிஸ்கவுண்ட் கேட்டுட போறோம்ன்னு உர்ர்ன்னே இருப்பானுங்க போல.
அடுத்தபடியா பக்கத்துல இருக்க துருக்கி ஹோட்டல் கல்லாப்பொட்டியான். நீங்க நூறுக்கு சாப்பிட்டாலும், ஆயிரத்துக்கு சாப்பிட்டாலும் ஒரே ரியாக்சன் தான், ஒரே ட்ரீட்மெண்ட் தான்.. உர்ர்..!!
அப்படியே யூடர்ன் போட்டா ஒரு சேட்டன், கல்லாப்பொட்டியவே கடைசிவர உர்ன்னு பாத்துட்டே நமக்கு சில்லறை தருவாப்புல. நிமிர்ந்த பார்வைன்னு ஒன்னு இருக்குறதே தெரியாதா? இல்லை மேனுபாக்சரிங்ல அதை தூக்கிட்டாங்களான்னு தெரியலை.
கல்லூரி வந்தப் பிறகு தான் ஹோட்டல்ல சாப்பிட ஆரம்பிச்சது, அதுவரைக்கும் ஹோட்டலுக்கும் எனக்கும் நேரடி சம்மந்தமே இருந்ததில்லை.
நினைவில் இருக்க எல்லா ஹோட்டலோட கல்லாப்பொட்டியான்சும் சிடுசிடுன்னு தான் இருந்திருக்கானுங்க, ஒரு க்யூட்டீசும், கயூட்டான்டியும் கூட கண்ணுல பட்டதே இல்லை.
ஹோட்டலுக்குப்போய் இந்த சிடுசிடுப்பான்ஸ் மூஞ்சிய பார்த்தாலே சாப்பாட்டு ருசி மண்டைக்கு ஏற மாட்டேன்குது.
ப்ளீச்..! சிரிச்சமுகமா இருக்க கல்லாப்பொட்டியான்ஸ் இருக்க ஹோட்டல் எதுனா இருந்தா பரிந்துரைங்களேன். த்ரி ஸ்டார், ஃபைவ் ஸ்டார் ஹோட்டலெல்லாம் தயவு செஞ்சு தூக்கிட்டு வராதீங்க. சுடுகாட்டு மயான அமைதியும், இருட்டும் இருக்குற அந்தக் கருமத்தை எல்லாம் ஹோட்டல் லிஸ்டுடலயே சேர்த்துக்கிறது இல்லை. பந்தாவுக்கு பேயோட ப்ரேக்பாஸ்ட் சாப்பிடுற மாதிரி தான் இந்த நட்சத்திரக் குறி ஹோட்டல்ஸ்ல சாப்பிடுறது...!!
படிச்சு...நல்லாருக்கு...
ReplyDeletemay i know your name please Mr/Ms anonymous??
Delete