முதல் யுத்தம்..!
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல புத்தகம். அதுவும் வரலாற்று நூல். பாலகுமாரன் அவர்களது எழுத்தில். வரலாற்றைப் பற்றி எழுதுவதில் அப்படி ஒரு ஆர்வம் மனிதருக்கு.
காந்தளூர் கடிகையில் போர்க்கலை பயின்று பெரும் எதிர்பார்ப்புகளோடு சோழதேசம் வரும் அருண்மொழிப் பட்டனின் கதை.அவனுக்கும் தலைச்சேரிப் பெண் சுந்தரிக்கும் இடையேயான கதை. சோழர்கள் கை ஓங்கியிருந்த காலம்.பாண்டியர்கள் வீழ்ச்சிக்குப் பின் பாண்டிய மன்னன் மறைந்திருந்து போருக்கு தயாராவதும், அதற்கு சேர மன்னன் உதவுவதும் அதன் பொருட்டு உருவாகும் போரே இந்த முதல் யுத்தம்.
தனக்கு போர்க்கலை போதித்த காந்தளூர் கடிகையையே தாக்க அருண்மொழி அனுப்பப்படுகிறான்.அவனது கதலியான சுந்தரி உளவு பார்க்க அனுப்பப்படுகிறாள்.அவனது முதல் யுத்தமே தனக்கு கல்வி போதித்த குருவிற்கு எதிராக.அதில் அவன் வென்றானா?. உளவு பார்க்க சென்ற காதலியை மீட்டானா? போன்ற கேள்விகளுக்கு பதிலே இந்த முதல் யுத்தம்.
Comments
Post a Comment