விலையில்லா வாக்குகள்....
எத்தனையோ விலையில்லா பொருட்களை வழங்கிய அரசு பொறியியல் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினியோடு நிறுத்திக்கொண்டது... பொறியியல் மாணவர்களின் வாக்குகளை முழுமையாகப் பெற அரசு அடுத்த தேர்தல் அறிக்கையில் அறிவிக்க வேண்டிய சில திட்டங்களை (யோசனைகளை) கீழே தொகுத்திருக்கிறேன். v கல்லூரி மாணவர்கள் நெட் பேக் போடுவதற்கு பெரும்பான்மையான பணத்தை செலவழிப்பதால் , விலையில்லா நெட்பேக்குகளை அறிமுகம் செய்யலாம் v கல்லூரிகளில் விலையில்லா வொய்பை (wifi) , அன்லிமிட்டடு டவுன்லோடு வசதியோடு அறிமுகப்படுத்தலாம். v ஜெராக்ஸ் போடுவதற்க்கு படிப்பில் ஒரு பகுதியை செலவழிப்பதால் , விலையில்லா ஜெராக்ஸ் கடைகளைத் திறக்கலாம் v மாணவர்கள் நல்ல உணவு குறைந்த விலையில் கிடைக்காமல் திண்டாடுவதால் , கல்லூரிக்கு அருகாமையில் அம்மா உணவகங்களைத் திறக்கலாம் v மாணவர்கள் தேர்வுக்கு பேனா கொண்டு வராமல் தவிக்கின்ற பொழுது , தேர்வறையிலே விலையில்லா பேனாக்களை வழங்கி குஷிப்படுத்தலாம். v செமஸ்டர் தோரும் விலையில்லா “ஐ.வி”( industrial visit) சுமார் ஐந்து நாட்களுக்கு குறையாமல் ஏற்பாடு ச...