விலையில்லா வாக்குகள்....
எத்தனையோ விலையில்லா பொருட்களை
வழங்கிய அரசு பொறியியல் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினியோடு நிறுத்திக்கொண்டது... பொறியியல்
மாணவர்களின் வாக்குகளை முழுமையாகப் பெற அரசு அடுத்த தேர்தல் அறிக்கையில் அறிவிக்க வேண்டிய
சில திட்டங்களை (யோசனைகளை) கீழே தொகுத்திருக்கிறேன்.
v
கல்லூரி மாணவர்கள் நெட் பேக் போடுவதற்கு பெரும்பான்மையான பணத்தை செலவழிப்பதால்
, விலையில்லா நெட்பேக்குகளை அறிமுகம் செய்யலாம்
v
கல்லூரிகளில் விலையில்லா வொய்பை(wifi) , அன்லிமிட்டடு
டவுன்லோடு வசதியோடு அறிமுகப்படுத்தலாம்.
v
ஜெராக்ஸ் போடுவதற்க்கு படிப்பில் ஒரு பகுதியை செலவழிப்பதால் , விலையில்லா
ஜெராக்ஸ் கடைகளைத் திறக்கலாம்
v
மாணவர்கள் நல்ல உணவு குறைந்த விலையில் கிடைக்காமல் திண்டாடுவதால் , கல்லூரிக்கு
அருகாமையில் அம்மா உணவகங்களைத் திறக்கலாம்
v
மாணவர்கள் தேர்வுக்கு பேனா கொண்டு வராமல் தவிக்கின்ற பொழுது , தேர்வறையிலே
விலையில்லா பேனாக்களை வழங்கி குஷிப்படுத்தலாம்.
v
செமஸ்டர் தோரும் விலையில்லா “ஐ.வி”(industrial visit) சுமார் ஐந்து
நாட்களுக்கு குறையாமல் ஏற்பாடு செய்யலாம்
v
Symposium நடைபெறும் தருவாயில் டீ ஷர்ட்(t-shirt)
அடிக்க செலவாவதால் , விலையில்லா டீ –ஷர்ட் அடித்து தரும் திட்டத்தை அறிமுகம் செய்யலாம்
v
தேர்வு எழுதும் செலவை விட ரீ வேலுவேஷன் (revaluation) செலவு அதிகமாவதால், விலையில்லா
ரீ வேலுவேஷன் திட்டத்தை அறிமுகம் செய்யலாம்.
v
லோக்கல் ஆத்தர் (author)புத்தகங்களை விலையில்லா புத்தகம் வழங்கும் திட்டம் மூலம் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கலாம்
v
பள்ளிகளில் வழங்கியதை போலவே விலையில்லா ஆறு சப்ஜக்ட் நோட்டுபுக்குகளை அறிமுகம்
செய்யலாம்
v
பள்ளிகளில் எட்டாவதுவரை பாஸ்போடுவதுபோல் ,பொறியியல் மாணவர்கள் ஏழாவது செமஸ்டர் வரை பாஸ்போடும் திட்டத்தை கொண்டு வரலாம்
v
விலையிலா கம்ப்யூட்டர்கள் விரைவில் பழுதாவதால் , செமஸ்டர் தோரும் விலையில்லா கம்ப்யூட்டர்கள் வழங்க ஏற்ப்பாடு
செய்யலாம்.
v
மாணவர்கள் பொழுதுப்போக்குவத்ற்கு வசதியாக விலையில்லா புதுப்பட டிக்கட்டுகளை
டிஸ்ட்ரிபியூட் செய்யலாம்
v
கல்லூரி முடித்து வேலைத்தேடுவதற்க்கு வசதியாக விலையில்லா உயர் ரக பைக்குகளை பைனல் இயர் மாணவர்களுக்கு வழங்கலாம்
மேற்கண்டதிட்டங்களை
அறிமுகம் செய்தால் பொறியியல் மாணவர்களின் விலையில்லா வாக்குகளைப் பெற்றுவிடலாம்
ni approm vila illadhavana agiduva sara....
ReplyDeleteBeing priceless s a gft
ReplyDelete