ஜென்
அடியேன் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் காலத்தில் வெளியான தினகரன் ஆன்மிக
மலரில் கடைசிப் பக்கத்தில் சூபி கதைகள் வெளியாகும் (அப்பொழுதெல்லாம் ஆன்மிக மலர்
புத்தக வடிவில் வெளிவராது, a3பேப்பர் சைசில் 8பக்கம் வெளிவரும்).ஒரு குட்டிப் பாராவில் சொல்ல வந்த விஷயத்தை
(தத்துவத்தை ) கதையோடு சொல்லிவிடுவார்கள்.வாரம்தோரும் அதை படிக்கவே ஆன்மிக மலரை தேடுவேன்.
சில பல வருடங்களுக்கு பிறகு அந்த பகுதியை நிறுத்திவிட்டார்கள் அத்தோடு சூபியைப் பற்றிய
எந்த விஷயமும் என் வாழ்வில் குறுக்கிடவே இல்லை.
கடந்த ஜனவரியில் சென்னை சென்ற
பொழுது ரயில்நிலையத்தில் இருந்த ஒரு புத்தககடையில் ஜென் தத்துவக் கதைகள் என்ற புத்தகம்
கண்ணில் தென்பட்டது. (புத்தகம் கண்ணில் தென்படுவதற்கு முன்பே அங்கே இருந்த ஒரு அழகு
பதுமை தான் அவ்விடம் நோக்கி அடியேனை நகரச் செய்தது. ஒரு பத்து நிமிட சைட்டிங் ஆப் இந்தியாவிற்கு
பிறகே ஜென் கண்ணில்பட்டார்).அடடே போதாதற்கு அப்புத்தகத்தை எழுதியது சத்குரு எனத் தெரிந்ததும்
எந்த விதயோசனையும் இல்லாமல் வாங்கி வந்துவிட்டேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசிக்கவும்
செய்தேன்.ஒரே மூச்சாக படித்து விடலாம் தான் இருந்தாலும் தத்துவம் ஆயிற்றே ,பொறுமை அதிகம் தேவைப்பட்டது. நாட்களும் நிறைய பிடித்தது படித்து முடிக்க.
ஒவ்வொரு கதையையும் நம் திருக்குறளோடும்,பகவத்கீதையோடும்
,கபிலர்,திருவாசகர்,ஆதிசங்கரர்,தாயுமானவர்,சிவவாக்கியர் ஆகியோரது பாடல்களோடு ஒப்பிட்டு வழங்கி இருக்கிறார்.
புத்தகத்தில் இருந்து சில விஷயங்கள்.
v அளவாகப்பார்,அளவாகக்கேள்,அளவாகமுகர்ந்துபார்,அளந்துபேசு,அளந்து செயல்படு, அளவாக எண்ணு,எதிலுமேஅளவாக இரு-புத்தர்
v “இயல்பாயிரு!”,”நீநீயாய்இரு”-இதுவே ஜென்
கோட்பாட்டின்அடிப்படைத் தத்துவம்.
v சீன மொழியில் ‘டிஸின்’ என்றால் பட்டு-மென்மையானது என்று பொருள்.
டிஸின் என்பதே நாளடைவில் ஸின் என்றும் ஸீனாய்என்றும்மாறிக் கடைசியில் சீனா என்று
ஆகிவிட்டது .
v ஜென் குருமார்களை நாடி “ ஒரு சொல் சொல்லுங்கள் “, என்று கெஞ்சுபவர்கள் ஏராளம் . அவர்களின்
அந்தச்சொற்கள் ‘ வைர வரிகள்’ எனப்படும். “வைரசூத்திரம்” என்று கூட உள்ளதாம்.
புத்தகத்தில் தத்துவத்தை தவிர தெரிந்து கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
“ஜென்தத்துவக்கதைகள்”
“குருஜிவாசுதேவ்”
“சிக்ஸ்த் சென்ஸ்வெளியீடு “
“150 ரூபாய்”
அவசியம்படியுங்கள்.......

Comments
Post a Comment