கே எப் சி-யில் இருந்து ஐபாக்கோ ஐஸ்கிரீம் வரை.....



    கடந்த ஒரு வாரமாகவே இன்னைக்கு பிராஜக்ட் ரிவ்வீவ் வருமா?? வருமா?? என அச்சத்தோடு கழிந்ததால் , ஒரு விதமான பதட்டத்தோடு இருந்தேன். இன்று முதல் ரிவ்வீவ் ஐ வெற்றிகரமாக முடித்ததால் பதட்டம் தனிந்தது. மாலை ஆனதும் எங்கேயாவது வெளியே செல்லலாம் எனத்தோன்றவே. அண்ணன் கருப்பிடம் ஆலோசனை கேட்க டூரிங் டாக்கீஸ் படத்துக்கு போலாம் என நெட்டில் ரிவ்வீவ்ஸ் பார்த்தார். இணைய தள நண்பர்கள் சாணியைக் கொண்டு ஊத்தாத கொறையாக கழுவி ஊத்தவே வேறு எங்கே செல்வது.என யோசிக்கலானோம்.
#######
     அடியேன் திருச்சியில் கே எப் சி தொடங்கியதில் இருந்து ஒரு முறை கூட சென்றதில்லை .அதற்கு முக்கிய காரணம் அங்கே சென்று எதை ஆர்டர் செய்வது எனத் தெரியாததே !!!!! கேட்டு தெரிந்து கொள்ளலாம்  தான். நமக்கு தான் கூச்ச சுபாவம் ஆயிற்றே. அண்ணன் கருப்பு திருச்சியில் சாப்பிடாத உணவகங்களே இல்லை . அண்ணன் உடன் சென்றால் அவர் ஆர்டர் போட்டுவிடுவார் நான் சில பலவற்றை தெரிந்து கொள்ளலாம் என எண்ணி அண்ணனை அழைத்தேன்.அவரும் ஒத்துழைத்தார்.
######
பர்சைத் திறந்து அமௌன்டை(சாரி சில்லரையை) எண்ணினேன். சுமார் 140 ரூபாய் தேறியது. அண்ணன் இதை வைத்துக்கொண்டு கே எப் சி யில் கூல்டிரிங்ஸ்கூட குடிக்க முடியாது என  கையை விரித்தார். கேடி யிடம் ஒரு 50 ரூபாயும், ஊர்க் காரப் பெண்ணிடம் ஒரு நூறு ரூபாயும் வாங்கி மொத்தமாக “ என்னால் 250 ரூபாய் தான் புரட்ட முடிஞ்சது மிச்சத்த நீங்க போட்டுக்கங்க” என அண்ணனிடம் பொறுப்பை ஒப்படைத்தேன்..
#######
     கே எப் சி யில் நுழையும் பொழுது மணி 6.00 பி.எம். ஒரு குடும்பம்,ஒரு திருமணமான ஜோடி , ஒரு காதல்  ஜோடி மட்டுமே இருந்தார்கள். அண்ணன் பிகர்களே இல்லை கொஞ்சம் லேட் ஆக வந்திருக்கலாம் என வருத்தம் கொண்டார். கவுண்டரில் பைரி 4 பீசும், 2 சிக்கன் ரைஸ் பவுலும் பட்ஜட்டுக்கு ஏதுவாக வாங்கிக் கொண்டோம். பின்னாலே இரண்டு கல்லூரி மாணவிகள் ஒரு நண்பரோடு வந்திருந்தார்கள்.
“ஹே பை தட் ஒன் யா!!!!”
“ நோ நோ நோ , பை திஸ் ஒன் யா””
என்று சப்ப இங்கிலிஷில் பீட்டர் விடவே ?? அண்ணன் நல்ல டைம் பாஸ் சிக்கிடுச்சுடா எனக் கண்ணசைத்தார். அதற்க்கேற்றார் போல் அவர்களும் அங்கும் இங்கும் நடன மங்கைகள் போல் நடனமாடிக்கொண்டிருந்தார்கள். பன்னுக்குள் பச்சை காய்கறிகள் வைத்த 2 பர்கர், 2 பெப்சி ஐ நாங்கள் கிளம்பும் வரை உறிஞ்சிக்கொண்டிருந்தார்கள். பாவம் அந்த பையனை பில் பே பன்னுவதற்காகவே அழைத்துவந்திருப்பார்கள் போலும் , கடைசி வரை அவனுக்கு ஒரு சின்ன பீஸ் கூட தரவில்லை .நாங்களோ கே எப் சி வந்ததற்கு அடையாளமாய் சில பல செல்பிகளை எடுத்துக்கொண்டோம். ஒரு வழியாக சாப்பிட்டு முடித்துவிட்டு கிளம்பும் போது அண்ணன் பக்கத்துல ரெனால்ட் ஷோரும் இருக்கு அங்க போய் போட்டோ எடுத்துக்கலாம் எனக் கூறினார் .நான் கூட எங்கே கார் வாங்கப் போகிறாரோ என ஏமாந்துவிட்டேன்.
########
கே எப் சி முடித்த கையோடு  தில்லைநகர் ஐபாக்கோ ஐஸ்கிரீம் ஷாப் சென்றோம் .அதுவரை வெண்ணிலா, ஸ்டிராபெர்ரி, சாக்லேட் போன்ற பிளேவர்களையே அறிந்த எனக்கு அங்கிருந்த வகை வகையான ஐஸ்கிரீம்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தின. இரண்டு ப்ரூட் நட் ஐஸ்கிரீம்கள்,ஜெம்ஸ், சாக்லேட் நூடுல் டாப்பிங்கோடு வாங்கி சாப்பிட்டோம். வாங்கி இருபது நிமிடங்கள் ஆகியும் கரையவே இல்லை . அங்கே பர்த்டே பார்ட்டி கூட அரேஞ் செய்து தருகிறார்கள். என்ன கேக்கின் விலைதான் ஆயிரத்து சொச்சம். நன்றாக சாப்பிட்டுவிட்டு சுத்தியது போதும் என ரூம் வந்து சேர்ந்தோம்.....
########. .
    

Comments

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!