ஸ்நாக்ஸ் பஞ்சாயத்து ....


    அவ்வப்பொழுது நினைத்து சிரித்துக் கொள்வேன் ,ஸ்நாக்ஸ்”   இதற்க்காக எவ்வளவு நடித்திருக்கிறேன், எவ்வளவு சண்டை போட்டிருக்கிறேன் , எவ்வளவு அடம் பிடித்திருக்கிறேன், எவ்வளவு திருட்டுத்தனம் செய்திருக்கிறேன்.இப்பொழுது நினைத்தாலும் சிப்பு சிப்பா வருது. அடியேனுக்கு சிறு வயதில் மிகவும் பிடித்த தின்பண்டங்கள் 
1.   பொட்டுக் கடலை
2.   வெல்லம்
3.   5 காசு பால்கோவா
4.   கால் ரூபாய் நெய் பால்கோவா
5.   1ரூபாய் முறுக்கு
6.   தேன் மிட்டாய்
7.   புளிப்பு மிட்டாய்
8.   எழந்த பழம்
9.   வத்தல்
10. மில்க் பிக்கீஸ்
11. கடலை உருண்டை
12. பொரி உருண்டை
13. 1 ரூபாய் சர்பத்
14. குச்சி ஐஸ்
15. கடலை மிட்டாய்
16. ஐஸ்கிரீம்......
இன்னும் பிற......
















     பொட்டுக்கடலை,வெல்லம் ...இவை தான் அடியேனின் ஆல் டைம் பேவரைட். எப்பொழுதும் வீட்டில் ஸ்டாக் இருந்தபடியே இருக்கும். கால்சட்டையின் இரண்டு பாக்கட்டுகளையும் நிரப்பிக்கொள்வேன். அம்மாவுக்கு தெரிந்தால் திட்டுவார்கள் “சட்னிக்கு இல்லாம பண்ணிட்டியே டா?” “என திட்டு விழும்,ஆகையால் திருடிக் கொண்டு வீட்டை விட்டு ஓடிவிடுவேன்.இருந்தாலும் அடுத்தநாள் எப்படியும் மாட்டிக்கொள்வேன்.
        மேற் குறிப்பிட்ட பால்கோவா வகையறாக்கள் எந்த ஹை டெக் ஸ்வீட் ஸ்டாலிலும் கிடைப்பதில்லை, பொட்டிக்கடைகளில் மட்டுமே கிடைக்கும் இவற்றை வாங்க அம்மா பர்சிலிருந்து ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என ஆட்டையை போட்டு அண்ணன் வீட்டில் போட்டுக் கொடுத்து நான் திட்டு வாங்கி அவன் நற்பெயர் வாங்கியதெல்லாம் இன்னும் நினைவில் நிற்கிறது
     தேன் மிட்டாய்,
புளிப்பு மிட்டாய்,
எழந்த பழம்
வத்தல்
     கடலை உருண்டை
பொரி உருண்டை
1 ரூபாய் சர்பத்
குச்சி ஐஸ்
கடலை மிட்டாய்
ஐஸ்கிரீம்...... இவை எல்லவற்றையும் பள்ளிக்கூட வாசலில் வாங்கி உண்டிருக்கிறேன். இப்பொழுதெல்லம் இவை மீது எனக்கு நாட்டமே வருவதில்லை ஏன் என்று தான் தெரியவில்லை.

Comments

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!