சைனீஸ் சாப்ஸி...(Chinese chopsuey)….-
ஹோட்டல்களில் சாப்பிட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டதே?. கையில் அமௌண்ட் வேறு சொற்ப்பமாகத்தான் உள்ளது.என்ன செய்வது? மனமானது எப்படியாவது சாப்பிட்டாக வேண்டும் என அடம்பிடித்தது. பட்ஜட்டில் சாப்பிட வேண்டும். எங்கே போவது ? என திங்க் செய்யும் போது அருகே ஆவூர்ரோட்டில் “விவிகிரிஸ்” மல்டிகுசைன் ரெஸ்டாரண்ட் இருப்பது நினைவு வந்தது. ஸ்பிலண்டரில் அண்ணனும் நானும் கிளம்பினோம்.
**********
அண்ணனுக்கு இந்த மாதிரி லோக்கல்
ஹோட்டல்களில் ( விலை குறைவாக இருந்தாலே அது லோக்கல் ஹோட்டல் தான்-அண்ணனின்
அவதானிப்பின்படி) எல்லாம் சாப்பிட்டு பழக்கம் இல்லை.இருந்தும் சுவை நன்றாக
இருக்கும் என்பதால் வர சம்மதித்தார். ஹோட்டல் ஆள் அரவமே இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது.
ஒருவன் மட்டும் ஏதோ பார்சலுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு அமர்ந்திருந்தான்.அவனது பார்சலை
உற்று நோக்கியதில் இருந்து அது அவனது கேர்ள்(கேள்)பிரண்டுக்கு என்பது தெளிவாகப் புரிந்தது.
பொதுவாக பசங்க இந்த மாதிரி ஹோட்டல்களுக்கு டிரீட்க்காக வருவார்களே தவிர இப்படி பார்சல் வங்க எல்லாம்
வருவதில்லை என்பதை சமுதாயம் அறிந்தது.
**********
மெனு கார்டை ஒரு பத்து நிமிட
புரட்டலுக்கு பிறகு அடியேன் புரியாத பெயர்களுக்குள் ஒரு மனம் கவர்ந்த பெயரை கண்டுபிடித்தேன்.அது
தான் “சைனீஸ் சாப்ஸி” முதலில் சைனீஸ் ”டாப்ஸி” என தவறாக அழைத்து தாப்ஸியின் தீவிர
ரசிகன் என்பதை சர்வருக்கு தெரியப்படுத்தினேன்.
கருப்பு ரிஸ்க் எடுக்க விரும்பாமல் ஒரு “எக்” கொத்து புரோட்டா வோடு நிறுத்திகொண்டார். அடியேன் சாப்ஸி யை ஆர்டர் கொடுத்துவிட்டேனே தவிர அதுவரை அந்த டிஷ் ஐ உண்டதே கிடையாது.ஒரு வித படபடப்போடு அமர்ந்திருந்தேன் .சர்வர் வேறு உங்களை மாதிரி யூத் தான் இதை எல்லாம் ஆர்டர் செய்றாங்கனு சொல்லும் போது அண்ணன் வெட்கப்பட்டார்.அவர் யூத்தப்பத்தி பேசும் போது சீனியர் சிட்டீசன் ஆன அண்ணன் ஏன் வெட்கி தலைகுனிந்தார் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.அண்ணன் வேறு அதுலாம் இங்க நல்லா இருக்காது டா என சற்று முன்பு தான் பீட்டர் விட்டார்.

***************
பத்து
நிமிட காத்திருப்புக்கு பிறகு வந்தது சைனீஸ் சாப்ஸி. அடியில் ஒரு 50 ml க்கு
குறையாமல் டொமேட்டோ சாஸ் . அதற்க்கு மேலே மொறுமொறு வென நூடுல்ஸ் , சிக்கன்,முட்டைமற்றும்கேப்சிக்கம் ஆகியவற்றை வதக்கி தூவி இருந்தார்கள்.மேலே ஒரு
ஆப் பாயில் போடப்பட்டிருந்தது. மிக அழகாக இருந்தது.. அண்ணன் அனுமதி இல்லாமல் ஒரு
வாய் அள்ளி சாப்பிட்டு விட்டு சுவை பிடித்துப் போகவே ஒரு உள்ளங்கை அளவு வாங்கிகொண்டார்.அண்ணனுக்கு
வாங்கிதான் பழக்கமே தவிர கொடுத்து பழக்கமே இல்லை.ஒரு வாய்கூட அவர் கொத்து
புரோட்டாவை தரவில்லை இறுதியாக சாப்பிட முடியாமல் கொஞ்சம் கொடுத்தார்.சாப்ஸி மிகவும்
நன்றாகவே இருந்தது
************
************
ரூமுக்கு வந்ததும் சாப்ஸியைப் பற்றி நெட்டில் தேடினேன் முதலில்
அமெரிக்க விவசாயிகள் விற்காத காய்கறிகளை மாலை ஆனதும் சாப்ஸி ஆக்கி
உண்டிருக்கிறார்கள். பிறகு தான் அது ஊருக்கு ஏற்றார் போல் பெயர் மாற்றம்
பெற்றிருக்கிறது.. அமெரிக்காவில் சாப்ஸிக்கு
என தனி ரெஸ்டாரண்டே இருக்கிறதாம்.. சாப்ஸி கிடைத்தால் உண்டு பாருங்கள்.
பி.கு; இந்த முறை ஹோட்டளுக்கு சென்றதும் புகைப்படம் எடுக்க மறந்துவிட்டோம்.

Comments
Post a Comment