சோப் நூடுல்ஸ்....-
இது என்ன டா புது டைப் ஆ இருக்கே.. நமக்கு தெரிஞ்சு நூடுல்ஸ்னாலே,
1.மேகீ
2.சிக்கன் நூடுல்ஸ்
3.எக் நூடுல்ஸ்
4.வெஜ் நூடுல்ஸ், இவ்வளவு தான். இந்த பெயரை பார்த்ததுல இருந்தே மண்டையை
கொடைஞ்சுட்டே இருக்கு...மொதல்ல ஒரு சின்ன பிளாஷ் பேக்...
கடந்த
வாரம் ஷாப்பிங் போன தினேஷ் பையோ சோப்(bio
soap) –னு ஒன்ன வாங்கிட்டு வந்தான். என்னடா இது புது தினுசா
இருக்கே??, சாண்டல் கலர் டப்பால இன்பில்ட் செஞ்சிருந்த அந்த சோப்ப கவரால
மோப்பம் புடிச்சு , இன்கிரீடியண்ட்ஸ்(ingredients)-அ படிச்சப்ப தான் இந்த “சோப் நூடுல்ஸ்” அப்படிங்கிற
அட்டிராக்டிவ் வார்த்தை கண்ணுல சிக்கிடுச்சு,சிக்கி பத்து நாளாகியும் புத்திய விட்டு போகவே இல்லை. சரி என்னடா கருமம் இதுனு
நெட்டுல தேடுனப்ப தான்,”அட !ச்சை! இந்த கருமம் தானா அது” னு கடுப்பாகிட்டேன்.
ஆமா யா!! இந்த சோப்ப
வெஜிடபிள் ஆயில் ல தான் மேனுபாக்சரிங் பன்றாய்ங்கனு
பச்ச கொழந்தைங்கள தவிர எல்லாத்துக்கும் தெரியும்.பாமாயில், தேங்காய்
எண்ணெய், ஆலிவ் ஆயில் எல்லா கருமத்தையும் , சோடியம்ஹைடிராகசைடு வச்சு “சோப்பானிபிக்கேசன்”
(டுவல்த்ல படிச்ச அந்த எழவெடுத்த ரியாக்சன ஞாபக படுத்திக்கோங்க!!!)
செஞ்சு ,கெட்டியா இந்த பாட்டி ஆசிட்ஸ(fatty acids) லாம் “சால்ட்”பார்ம் க்கு கொண்டு வந்துடுறாய்ங்க. இத , இந்த கருமத்த தான் “சோப்
நூடுல்ஸ்னு “ சொல்றாய்ங்க. இது தான் எல்லா சோப்புக்கும் பேசிக். இத தான் எல்லா சோப்
கம்பேனி காரணுங்களும்,வாங்கி அவங்க இஸ்டத்துக்கு பிக்மண்ட்ஸ், நறுமணப்பொருட்கள், அது இது லொட்டு லொசுக்குனு எல்லாத்தையும்
சேர்த்து வேற வேற பிராண்ட் ஆ விக்குறாய்ங்க.
ஆக எல்லாத்துக்கும்
நம்ம தலைவர் சோப் நூடுல்ஸ் தான் மூலம், பேசிக் எல்லாம். .....
சோப் நூடுல்ஸை திண்பண்டம் என எண்ணி ஏமாந்த அனைவரும்,"டிக்
டாக்" வாங்கி உண்டு மகிழவும். ஏனென்றால் சோப்நூடுல்ஸ்சும் அவ்வாறே இருக்கிறது....
Comments
Post a Comment