என்ன சொல்ல வருகிறது இந்த தேர்தல்.....?

ஆ...ஊ.. என பெரிதாக ஆட்டம் போட்ட, பெரிய கட்சிகள் என தங்களை எண்ணிக்கொண்டு மனப்பால் குடித்த, தங்களால் மாற்றத்தை தர முடியும் என இறுதி வரை நம்பிய அனைத்து கட்சிகளும் இந்த தேர்தலில் பியூஸ் போயிருக்கின்றன...!தங்களுக்கு மாற்று தற்பொழுதைக்கு இல்லை என இரு பெரும் கட்சிகளும் நிரூபித்திருக்கின்றன.

கன்னிக்கழியாமல் களம் இறங்கிய சீமானின் நாம் தமிழர் கட்சி, மார்க்சிஸ்ட்டுகளை விட குறைந்த வாக்குகளைப் பெற்று எங்கு கற்பை இழந்துவிடுமோ என பதறிக்கொண்டிருந்தேன்.நல்ல வேளை அவர்களை விட அதிக வாக்குகளைப் பெற்று கற்பை காப்பாற்றிக்கொண்டது. சீமான் பேச்சில் இருந்த ஆவேசம், ஏனோ தமிழக மக்களின் மனங்களை எட்டிக்கூட பார்க்கவில்லை. பக்குவம் வராத சிறு பிஞ்சுகள் மட்டுமே பாசத்தோடு அண்ணனுக்கு வாக்களித்திருக்கிறார்கள். அவரது தலைநகர் மாற்றம் என்ற கோஷம் வடிவேலுவின் காமெடிக்கணக்காக மாறியது பெரும் துயரம்.தமிழகத்தை விட்டு பிரிந்திருக்கும் , வெளிநாடுகளில் பணி புரியும் தமிழர்களிடையே சீமான் மற்ற பெருந்தலைகளை விட அதிக செல்வாக்கு பெற்றிருக்கிறார்.ஒரு வேளை NRI  களுக்கு ஓட்டு போடும் வாய்ப்பு கிட்டினால் சீமான் டெப்பாசிட் பெருவார். மற்றபடி இன்னும் பத்து, இருபது வருடங்களுக்கு கடையில் ஈ ஓட்டலாம். மற்ற கட்சிகள் இவரது பெயரை ஒரு பேச்சுக்கு கூட பிரச்சாரத்தில் பயன்படுத்தவில்லை மற்றும் முற்றிலுமாக புறந்தள்ளிவிட்டார்கள் என்றே கூறலாம். நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்.

  நெக்ஸ்ட் பா.ஜ.க, தமிழர்கள் தேசிய நீரோட்டத்தில் முற்றிலுமாக கலப்பதே கிடையாது. காரணம் அடிக்கடி இவர்கள் பன்னும் ஹிந்தி, பூந்தி திணிப்பு, தமிழனுக்கு தமிழைத் தவிர பிற மொழிகளைக் கண்டாலே ஒரு வித அமானுஷ்ய அலர்ஜி. அது தவிர பா.ஜ.க தனது ஆணி வேரான ஆர்.எஸ்.எஸ்-ஐ தமிழகத்தில் இன்னும் முழுதாக ஆழப் பதிக்கவில்லை. அதோடு இந்த மோடி அலை,ஜாடி அலையெல்லாம் அக்கட தேசத்தொடு நின்று போய்விடுகின்றன.ஏனோ எல்லையை தாண்டுவதேயில்லை.தமிழனுக்கு தேவை எல்லாம் எங்கும் தமிழ், எதிலும் தமிழ். பிறகெப்படி சீமான் தோற்றார் என வினவாதீர்கள்?. சீமான் சிறுபிள்ளை. அவர் பேச்சை மழலைக் கணக்காக ரசித்தார்களேத் தவிர ,பெரிதாக பொருட்படுத்தவேயில்லை.பா.ஜ.க-வுக்கு தனிப் பெரும்பான்மை என்றுமே தமிழகத்தில் கிடைக்கப் போவதேயில்லை.என்றுமே கூட்டணி கொத்து பரோட்டா தான்.பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

பா.ம.க... தாங்கள் ஜாதிக்கட்சி இல்லை என நிலவில் நின்று கூப்பாடு போட்டாலும். இங்கு யாரும் நம்புவதாக இல்லை.அன்புமணி நல்லவர் தான், அதை யாரும் மறுப்பதற்க்கில்லை.ஆனால் அவர் ரிஷி மூலம் வன்னியர் சங்கமாக இருப்பது பெரும் துயரம். அவர்கள் செய்த ஜாதி அரசியலை யாரும் மறக்கவில்லை. இப்போது என்னதான் தாங்கள் பொதுக்கட்சி என கூப்பாடு போட்டாலும் கூப்பிடு தூரத்தில் இருப்பவர்கள் கூட கேட்டுவிட்டு புன்முறுவல் செய்துவிட்டு கடந்துவிடுகிறார்கள்.எதிர் காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

ம.ந.கூட்டணி. வைகோ சென்ற இடமெல்லாம் சின்னாபின்னமான வரலாறு எக்கச்சக்கமாக காண கிடைக்கிறது. சிங்கிளாக விருத்தாசலத்தில் பிரம்மாண்டமான வெற்றி பெற்ற கேப்டனை டெப்பாசிட் இழக்க வைத்து வாழ்நாள் சாதனை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார். ஆரம்பம் முதலே தி.மு.கவுடன் கூட்டணி என தான், மக்களும், கேப்டன் கட்சி தொண்டர்களும் நம்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால் கேப்டன் பல யூ-டர்ன்களைப் போட்டு வைகோ வுடன் சேர்ந்தார்.டெப்பாசிட் காலியானது. கட்சியும் தற்பொழுது கவலைக்கிடமாக உள்ளது. தற்பொழுது செவிவழித் தகவல் ஒன்று உலாவிக்கொண்டிருக்கிறது.ம.ந.கூக்காக ஜெ-விடம் வைகோ வாங்கிய 1500கோடியில், கேப்டனுக்கு 1000கோடி, மற்றபெருந்தலைகளுக்கு தலா 100 கோடி எனப் பிரித்துக் கொண்டதாகவும் தகவல் பரவி வருகிறது. ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்.

இரு பெரும் திராவிட கட்சிகளும் நேரடியாக மோதி தங்களை பரிசித்துப் பார்த்துக் கொண்டார்கள்.இரு பெரும் கட்சிகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. சமபலம் கொண்டவையாகவே இருக்கின்றன. தி.மு.க அழகிரியை சேர்த்துக்கொண்டிருந்தால் இன்னும் இருபது தொகுதிகளையாவது பெற்றிருக்கும்.பெரும்பாலான இடங்களில் அவர்கள் பணம் கொடுக்கவில்லை. அ.தி.மு.கவுக்கு இணையாக பணம் கொடுத்திருந்தால், காட்சிகள் மாறியிருக்கும்.ஆட்சியும் மாறியிருக்கும். அ.தி.மு.க எட்ஜில் தான் பல இடங்களில் வென்றிருக்கிறது.ஒன்னும் சொல்வதற்க்கில்லை , இங்கு எல்லாமே பண மயம் தான். காசு, பணம் , துட்டு , மணி ,மணி.....!

Comments

Post a Comment

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!