தெரிந்தால் போதும்..!!!


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பின்வரும் தகவல்களைப் பெற முடிந்தால் புண்ணியமாகப் போகும்.

*இதுவரை தமிழக அரசு, தமிழக மீனவர்களை மீட்க பிரதமருக்கு எழுதிய கடிதங்கள் எத்தனை, அவற்றுள் எத்தனைக் கடிதங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

*போத்தீஸால் கொடுக்கப்பட்ட ஒரு லட்சம் மரக்கன்றுகள் என்னவாயின??

*சென்னை அமிர்தாஸில் அதன் விளம்பரத்தில் கூறுவது போல் பணி புரியும் அந்த ஆயிரம் ஆசிரியர்கள் யார், யார்?? நிஜமாகவே அந்த ஆயிரம் பேர் ஆசிரியர்களா? இல்லை மாணவர்களா?

*விராட் கோலியின் ரசிகராக இருந்தும், அனுஷ்கா சர்மாவைத் திட்டாதவர்கள் எத்தனை பேர்?

*இதுவரை ரஜினி உட்பட முன்னணி நடிகர்கள் பேசிய பஞ்ச் டயலாக்குகள் எத்தனை? தகவல் கிடைத்தால் கின்னசுக்கு அப்ளை பண்ணலாம்.

*மோடி செல்லாத நாடுகள் எவை எவை???

*அனிருத், தேவி ஸ்ரீ் பிரசாத் இருவரில் யார் ராக்ஸ்டார்??

*கடந்த 2011-2016-ல் எத்தனை முறை தமிழக முதல்வர் , மக்களையும், பத்திரிக்கையாளர்களையும் சந்தித்திருக்கிறார்.

*முதல்வரது பேச்சையும் மீறி ஸ்டாலினுக்கு தவறாக இருக்கை ஒதுக்கிய அந்த கருப்பு மனிதன் யார்?

*இதுவரை சிவா, கார்த்திக் என்ற இரு பெயரும் எத்தனை முறை தமிழ் ஹீரோக்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது?

* சீயான் என்றால் என்ன அர்த்தம்?

*கேப்டனை கலாய்க்காத இணைய புரட்சியாளர்கள் எத்தனை பேர்?

*ம.ந.கூ-யின் தேர்தல் தோல்விக்கு பிறகு வைகோவை திட்டாதவர்கள் எத்தனை பேர்?

*விக்ரம் நடித்த ‘ராஜபாட்டை’ திரைப்படத்தில் வரும் ‘பனியே பனிப்பூவே..’ பாடலில் இடம் பெறும் பனிப்பூ எது? அது எங்கு பூக்கிறது.

* சிம்பு பாடிய பீப் சாங்கை கேட்காதவர்கள் எத்தனை பேர்?

* டகால்டி என்றால் என்ன?

................ லிஸ்ட் ரொம்ப பெருசாகிட்டே போகிறது.முதலில் இவற்றுக்கு பதில் கிடைக்கட்டும்.பிறகு மற்றவற்றைப் பார்க்கலாம்.

Comments

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!